பரபரப்ப்பை கிளப்பிய நடிகர் விஜய்-ன் புதிய போஸ்டர்!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் பிரவேசித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார் மேலும் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ளார்.

Updated: Jun 18, 2018, 12:28 PM IST
பரபரப்ப்பை கிளப்பிய நடிகர் விஜய்-ன் புதிய போஸ்டர்!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் பிரவேசித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார் மேலும் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அஜித், விஜய் ரசிகர்களும் அவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். 

தற்போது வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பல பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேபோல் அஜித் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களும் இதேபோன்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.