7th Pay Commission பம்பர் செய்தி: அகவிலைப்படி அரியர் தொகை குறித்த முக்கிய அப்டேட்

18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே முறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 03:15 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணச் செய்தி வந்துள்ளது.
  • அகவிலைப்படி நிலுவை (18 Months DA Arrear) குறித்து மோடி அரசு விரைவில் முடிவெடுக்கும்.
  • நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
7th Pay Commission பம்பர் செய்தி: அகவிலைப்படி அரியர் தொகை குறித்த முக்கிய அப்டேட் title=

18 Months DA Arrear update: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணச் செய்தி வந்துள்ளது. 18 மாத அகவிலைப்படி நிலுவை (18 Months DA Arrear) குறித்து மோடி அரசு விரைவில் முடிவெடுக்கும். அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உள்ளது. ஆனால், ஜூலைக்கு முன், இது 17 சதவீதமாக இருந்தது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படி (Dearness Allowance) 2020 ஆம் ஆண்டில் முடக்கப்பட்டது. நிலைமை சற்று சீராகவே, இது, ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பு 28 சதவீதமாகவும், பின்னர் 31 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் பெறப்படவில்லை.

கிறிஸ்துமஸுக்கு முன் பெரிய அப்டேட் வரக்கூடும்

அமைச்சரவை செயலாளருடன் நடைபெறும் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில், கிறிஸ்துமஸுக்கு சற்று முன் (டிசம்பர் 24 ) அமைச்சரவை செயலாளருடன் ஒரு சந்திப்பு இருக்கலாம். அதில் இந்த பிரச்சினை விவாதிக்கப்பட உள்ளது. இருப்பினும், மத்திய ஊழியர்களுக்கு DA Arrears வழங்கும் யோசனை இல்லை என்று ஜூலை மாதம் மத்திய அரசு தெளிவுபடுத்தியது. 

ஆனால், தொடர் கோரிக்கை மற்றும் ஓய்வூதியதாரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் காரணமாக, இந்த விஷயம் தற்போது பரிசீலனையில் உள்ளது. இனி, இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டம் OPS! 

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை

ஊழியர்களின் 18 மாத நிலுவைத் தொகை (18 Months DA Arrear update) குறித்து, கவுன்சிலின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி மற்றும் பல பெரிய சலுகைகளை வழங்கியது. ஆனால் நிலுவைத் தொகை பிரச்சினை இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது. 

ஜேசிஎம் செயலர் (பணியாளர்கள் தரப்பு) சிவகோபால் மிஸ்ராவும் இது குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே முறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. டிசம்பரில் அமைச்சரவை செயலாளருடன் இது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.

பிரதமர் மோடி அரியர் தொகை குறித்த முடிவை எடுப்பார்

அமைச்சரவைச் செயலாளருடனான சந்திப்பில் இந்தப் பிரச்சினை எழுப்பபடக்கூடும். ஆனால், அரியர் தொகை குறித்து பிரதமர் மோடி முடிவெடுக்கலாம். 18 மாத நிலுவைத் தொகை தொடர்பாக, ஓய்வூதியர்கள், பிரதமர்  தலையிடக் கோரி அவருக்கு கடிதம் எழுதியிருந்தனர். 18 மாத நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் கிடைத்தால், ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பெரும் தொகை வரும். 

இந்திய ஓய்வூதியர் மன்றம் (BMS) பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்டோபர் மாதம் கடிதம் எழுதியது. ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தை நிறுத்துவதற்கான முடிவு சரியல்ல என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்திற்கு 18 மாத பணம் மிகவும் முக்கியமானதாகும். அதை நிறுத்துவது ஓய்வூதியதாரர்களை வெகுவாக பாதிக்கக்கூடும். 

2 லட்சத்துக்கு மேல் அரியர் தொகை கிடைக்கும் 

JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. லெவல்-13 அல்லது லெவல்-14 ஊழியர்களுக்கு கணக்கிட்டால், அகவிலைப்படி அரியர் தொகை ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை இருக்கும்.

ALSO READ : 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறதா அகவிலைப்படி? ஜனவரியில் நல்ல செய்தி!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News