அடடே... இதுமாதரி ஒரு நிறுவனம் நம்ம நாட்டில் இல்லாம போயிடுச்சே!!

வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு வழங்குவதாக ஜப்பான் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2018, 04:03 PM IST
அடடே... இதுமாதரி ஒரு நிறுவனம் நம்ம நாட்டில் இல்லாம போயிடுச்சே!! title=

வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு வழங்குவதாக ஜப்பான் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது... 

ஜப்பான்: வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக இரவு முழுவதும் சமூக வலைதளங்களின் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி இரவு முழுவதும் தூங்காமல் நேரத்தை சமூக இணையதளத்தில் செலவிட்டால் பின்னர் காலையில் எப்படி வேளையில் கவனம் செலுத்த முடியும். இதற்கான ஜப்பானை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் புதிய உத்தியை கையாண்டிள்ளது. அதுதான் இந்த ரூ.42 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை. 

ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டெர்நேஷ்னல் என்ற திருமணங்களை நடத்தி வைக்கும் நிறுவனம் இந்த அதிரடி ஆபரை அறிவித்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 5 நாட்களின் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமான செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு நம்முடைய தூங்கும் நேரத்தை அது கணக்கிடும். 6 மணி நேரத்தை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கப்புள்ளி வழங்கப்படும். புள்ளிகளின் அடிப்படையில் நிறுவனத்துக்கு சொந்தமான உணவகத்தில் ஆண்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் வரையிலும் உணவு உட்கொள்ளலாம் என்றும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து விளக்கமளித்த அந்நிறுவன அதிகாரி கூறுகையில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களில் 92 சதவீதம் பேர் இரவில் சரியாக தூங்குவதில்லை. இதனால் அலுவலக வேலைகள் பாதிக்கின்றன. தூக்கத்தின் தேவையை உணர்த்தவே போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். சிறந்த உணவு, உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்துகிறோம், அலுவலகத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

 

Trending News