மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்: Form 6A அவசியம்

Central Government Employees: ஓய்வுபெறும் ஊழியர்கள் பவிஷ்யா (Bhavishya) அல்லது e-HRMS போர்ட்டலைப் பயன்படுத்தி புதிய ஒற்றை ஓய்வூதியப் படிவம் 6-A ஐ நிரப்பலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2024, 04:32 PM IST
  • ஓய்வூதிய நடைமுறை தொடர்பான புதிய ஒழுங்குமுறை.
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை வெளியிட்ட அறிவிப்பு.
  • ஓய்வூதியப் படிவம் 6-A என்றால் என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்: Form 6A அவசியம் title=

Central Government Employees: ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் மத்திய பணிகளிலிருந்து ஓய்வுபெறும் நபர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களூக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.,

படிவம் 6A

மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் உள்ளது. பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க அவர்கள் இப்போது ஆன்லைன் படிவம் 6A ஐ (Form 6) பூர்த்தி செய்ய வேண்டும்.

ஓய்வூதிய நடைமுறை தொடர்பான புதிய ஒழுங்குமுறை

ஓய்வூதிய நடைமுறை தொடர்பான இந்த புதிய ஒழுங்குமுறை நவம்பர் 6, 2024 முதல் நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வுபெறும் ஊழியர்கள் பவிஷ்யா (Bhavishya) அல்லது e-HRMS போர்ட்டலைப் பயன்படுத்தி புதிய ஒற்றை ஓய்வூதியப் படிவம் 6-A ஐ நிரப்பலாம். ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களின் காகித விண்ணப்பங்கள் இனி பரிசீலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை வெளியிட்ட அறிவிப்பு

இந்திய அரசின் பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Online Pension Forms: விண்ணப்பப் படிவங்கள்

முன்னதாக, ஓய்வூதிய விண்ணப்பப் படிவங்களை காகிதத்தில் நிரப்பலாம் என்ற வசதி இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான ஆன்லைன் ஓய்வூதியப் படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த புதிய விதியானது அரசாங்க செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7 கோடி PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: வட்டி விகிதம் குறித்த குஷியான அப்டேட்

Form 6A: ஓய்வூதியப் படிவம் 6-A என்றால் என்ன?

- ஓய்வுபெறும் ஊழியர்களின் வசதிக்காக எளிமைப்படுத்தப்பட்ட ஓய்வூதியப் படிவம் 6A உருவாக்கப்பட்டுள்ளது.
- இது படிவம் 6, 8, 4, 3, A, Format 1, Format 9, FMA மற்றும் Zero Option Form ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
- இதற்காக, CCS ஓய்வூதிய விதிகள், 2021 இன் விதிகள் 53, 57, 58, 59, 60 இல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
- செலவினத் துறை, சட்டம் மற்றும் நீதித் துறை, கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அகவுண்ட்ஸ், இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை. போன்ற அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பிறகு இந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு வேலைகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு (Retiring Employees), இந்த ஓய்வூதிய படிவங்கள் 6A 'பவிஷ்யா' அல்லது e-HRMS போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. பவிஷ்யா போர்டல் என்பது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் ஒரு முயற்சியாகும். இதன் கீழ், ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவுகள் (Pension Payment Orders) என அனைத்தையும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, புதிய ஓய்வூதியப் படிவம் 6-A ஆனது பவிஷ்யா மற்றும் e-HRMS 2.0 போர்ட்டல்களில் ஒருங்கிணைக்கப்பட்டு, நவம்பர் 16 முதல் மத்திய அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 4, 2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியப் படிவம் 6-A பவிஷ்யா மற்றும் e-HRMS 2.0 போர்ட்டல்களில் கிடைக்கும்.

மேலும் படிக்க | Mutual Fund: ரூ.10,000 மாத முதலீடு போதும்... ஓய்வு பெறும் போது ரூ.15 கோடி கையில் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News