WWE-ல் களமிறங்குகிறாரா கார்த்தி?... வைரலாகும் வீடியோ

நடிகர் கார்த்தி WWE-ல் கலந்துகொண்ட ப்ரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 14, 2022, 05:30 PM IST
  • WWE ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது
  • கார்த்தி இருக்கும் வீடியோ வைரல்
  • ஜான் ஆபிரஹாமும் வீடியோவில் இருக்கிறார்
 WWE-ல் களமிறங்குகிறாரா கார்த்தி?... வைரலாகும் வீடியோ title=

பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமான கார்த்தி தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடித்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என வரிசையாக மூன்று படங்கள் ஹிட்டடித்துள்ளன. இதனையடுத்து குக்கூ இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி படம் மெகா ஹிட்டானதை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிக்கவிருக்கிறார். இதுதொடர்பான தகவலை கார்த்தியும், லோகேஷ் கனகராஜும் உறுதி செய்திருக்கின்றனர்.

இந்தச் சூழலில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் (WWE) நிகழ்ச்சிக்காக ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் நடிகர்கள் ஜான் ஆபிரஹாமும், கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிவித்திருந்தது. இதனையடுத்து இருவரும் ரெஸ்ட்லிங் போட்டியில் மோதவிருக்கிறார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி  மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோர் பங்கேற்ற ப்ரமோ வீடியோவை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இதன் மூலம் தமிழுக்கான விளம்பர தூதராக நடிகர் கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என உறுதியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | பான் இந்தியா படம் என்பது பைத்தியக்காரத்தனம் - அமீர் அதிரடி

மேலும் படிக்க | ரசிகர்களுடன் தொடர் சந்திப்பில் விஜய்... துணிவுக்கு அஞ்சிய வாரிசு?

மேலும் படிக்க | நண்பன் உதயநிதி அமைச்சர்...9 வருட கனவு..நெகிழ்ந்து போன நடிகர் விஷால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News