ரசிகர்களுடன் தொடர் சந்திப்பில் விஜய்... துணிவுக்கு அஞ்சிய வாரிசு?

துணிவுடன் களமிறங்கும்போது தனக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டால்கூட மிகப்பெரிய தோல்வியாகவே இண்டஸ்ட்ரியில் பேசப்படும் என நினைக்கிறார் தளபதி விஜய்

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 14, 2022, 04:06 PM IST
  • ரசிகர்களை சந்தித்துவருகிறார் விஜய்
  • பிரியாணியுடன் தடல்புடல் விருந்து வைக்கப்பட்டது
  • துணிவும், வாரிசும் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன
 ரசிகர்களுடன் தொடர் சந்திப்பில் விஜய்... துணிவுக்கு அஞ்சிய வாரிசு? title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்ததை அடுத்து தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்திருக்கிறார் விஜய். தில்ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைத்திருக்கிறார். படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்தச் சூழலில் படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. வாரிசு படத்துடன் அஜித் நடித்திருக்கும் துணிவு படமும் வெளியாகவிருக்கிறது.

துணிவு படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். அஜித்தும், வினோத்தும் இணைந்த முதல் இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றிருப்பதால் இந்தப் படத்தின் தன்னை நிரூபித்தே ஆக வேண்டுமென்ற வேட்கையில் இருக்கிறார் வினோத். அதற்கேற்றார்போல் படத்தில் அஜித்தின் லுக்கும், படத்தில் இடம்பெற்றிருக்கும் சில்லா சில்லா பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மேலும், இது அயோக்கியர்களின் ஆட்டம் என வினோத்தும் சமீபத்திய பேட்டியில் படத்திற்கான லீடை கொடுத்திருந்தார்.

இதன் மூலம் துணிவு படம் க்ரைம் சம்பந்தப்பட்டது என்பது உறுதியாகியிருக்கிறது. க்ரைம் தொடர்பான கதைகளில் வினோத் கில்லி என்பதால் படத்தின் மீதான நம்பிக்கை ஏகே ரசிகர்களுக்கு உச்சத்தில் இருக்கிறது. அதுமட்டுமின்றி படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith

துணிவின் நிலைமை இப்படி இருக்க வாரிசு நிலைமை தலைகீழாக இருப்பதாக கூறப்படுகிறது. படம் பக்கா ஃபேமிலி எண்ட்டெர்டெயினராக உருவாகியிருக்கிறது. இருந்தாலும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆந்திராவில்தான் இப்படி என்றால் தமிழ்நாட்டிலும் அதே நிலை நீடிக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அஜித்திற்கு இணையான ஹீரோ விஜய் என்பதால் அந்த சிக்கல் தமிழ்நாட்டில் எழ வாய்ப்பில்லை.

துணிவு முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேடில் உருவாகியிருக்கும் படம் என கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. அஜித் இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் அனைத்தும் அதிரிபுதிரி ஹிட்டடித்தவை. ஆனால் வாரிசு படமோ ஃபேமிலி எண்டர்டெயினர் பேக்கஜாக உருவாகியிருக்கிறது. இதனால் துணிவுடன் வாரிசு களமிறங்கும்போது அது சறுக்குவதற்கான வாய்ப்பிருப்பதாக விஜய் அஞ்சுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, துணிவுக்கு ரெட் ஜெயண்ட் என்ற பிரமாண்ட பேனர் துணையிருப்பதால் வாரிசுக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எனவே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விஜய் களமிறங்கியிருக்கிறார். அதன் காரணமாகத்தான் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து சந்திப்பில் ஈடுபட்டுவருகிறார். 

ஏனெனில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்துடன் விஸ்வாசம் களமிறங்கியபோது விஸ்வாசம் படமே வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டது. எனவே துணிவுடன் களமிறங்கும்போது தனக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டால்கூட மிகப்பெரிய தோல்வியாகவே இண்டஸ்ட்ரியில் பேசப்படும். 

ஆக, ரசிகர்களை சந்திப்பதன் மூலம் அவர்களது உற்சாகத்தை வற்றிப்போகாமல் பாதுகாத்து வாரிசின் வெற்றியை அறுவடை செய்ய முடியும் என நினைக்கிறார் விஜய். அதன் வெளிப்பாடுதான் ரசிகர்களுடனான அவரது தொடர் சந்திப்புஎன்கின்றனர் விவரமறிந்தவர்கள். 

மேலும் படிக்க | நண்பன் உதயநிதி அமைச்சர்...9 வருட கனவு..நெகிழ்ந்து போன நடிகர் விஷால்

இதற்கிடையே ரசிகர்களுடன் விஜய் நடத்தும் இந்தத் தொடர் சந்திப்புகளிலும், பிரியாணி விருந்திலுமே துணிவுக்கு வாரிசு அஞ்சியது தெள்ளத்தெளிவாகிறது என கூறிவருகின்றனர் அஜித் ரசிகர்கள். எது எப்படியோ இந்தப் பொங்கலுக்கு இரண்டு படங்களும் வெற்றிப்பெற்று தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்துக்கு நகர வேண்டுமென்பதுதான் முக்கியமான தேவை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News