மண்ணுலகை விட்டு மறைந்த மனோபாலாவின் திரைப்பயணயத்தில் சில பக்கங்கள்

உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ள நடிகரும் இயக்குநருமான மனோபாலாவின் திரைப்பயணத்தின் சில பக்கங்கள். ​

Written by - Yuvashree | Last Updated : May 3, 2023, 03:26 PM IST
  • நடிகரும் இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
  • பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அறிமுகமானார்.
  • 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளர்.
மண்ணுலகை விட்டு மறைந்த மனோபாலாவின் திரைப்பயணயத்தில் சில பக்கங்கள் title=

தமிழ் திரையுலகம் மயில்சாமி-மனோபாலா என இரண்டு பெரிய நடிகர்களை ஒரே ஆண்டில் இழந்துள்ளது. 70களில் அறிமுகமாகி 400க்கும் மேற்பட்ட படங்களில் தடம் பதித்து இன்று தனது மறைவால் பலரையும் கலங்க வைத்துள்ளார், மனோபாலா. அவரது திரைப்பயணத்தின் சில பக்கங்களை இங்கே பார்க்கலாம். 

 

பாரதிராஜாவின் மாணவன்:

 

கண்கள் முழுவதும் சினிமா கனவுகளாேடு பலரும் கோலிவுட்டிற்குள் பிரவேசித்து வந்த காலம் அது. அப்போதுதான் மனோபாலா என்ற இளைஞரும் சினிமாவிற்குள் நுழைந்தார். இயக்குநர் பாரதி ராஜாவிடம் புதிய வார்ப்புகள் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பாரதிராஜா, மனோபாலவை சில சமயங்களில் ”எனது மாணவன்” என்று குறிப்பிடுவதுண்டு. அப்படியே ஆசானிடமிருந்து சினிமாவை மெல்ல மெல்ல கற்க தொடங்கிய மனோபாலா, பின்னாளில் இவ்வளவு பெரிய நடிகராவார் என யாருக்கும் தெரியாது. உதவி இயக்குநராக இருந்த அவர், பின்னர் பல திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்து தனக்கு பிடித்த சினிமாவை அப்படியே பிடித்துக்கொண்டார். 

 

மேலும் படிக்க | பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்

 

பன்முகத்திறமை கொண்ட நடிகர்:

 

1982ஆம் ஆண்டு ஆகாய கங்கை என்ற படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து பிள்ளை நிலா, கருப்பு வெள்ளை, டிசம்பர் 31, என் புருஷன் எனக்கு மட்டும்தான் என பல படங்களை இயக்கி தமிழின் திறமை மிகு இயக்குநர்களுள் ஒருவர் என்ற பெயருக்கும் சொந்தமானார். அது மட்டுமா? 2014ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற சதுரங்கை வேட்டை படத்தின் தயாரிப்பாளரே இவர்தான். தான் இயக்குநராக புதுமுக இயக்குநராக  இருக்கையில் பட்ட கஷ்டத்தை வேறு எந்த புதுமுக இயக்குநர்கள் யாரும் படக்கூடாது என நினைத்தவர் மனோ பாலா. இதனாலேயே, சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகமான ஹெச்.வினோத்தின் படத்தை தயாரித்தார். 

 

சீரியலிலும் ஒரு ரவுண்டு!

 

பல தமிழ் படங்களில் நடித்தும் பல படங்களை இயக்கியும் வந்த மனோபாலா, சில சீரியல்களையும் இயக்கினார். 1999 முதல் 2009 வரை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில சீரியல்களை இயக்கி அதன் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்ப்பினை பெற்றார், மனோபாலா. இவரது படங்கள் ஹிட் அடித்தது போல இவர் இயக்கிய தொடர்களும் பெரிதாக பேசப்பட்டன. 

 

மனோபாலா இதுவரை 18க்கும் மேற்பட்ட படங்களையும் 16 தொலைக்காட்சி தொடர்களையும் டைரக்டு செய்துள்ளார். அது மட்டுமன்றி, இதுவரை 450க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் கலக்கியுள்ளார். 

 

மனோபாலாவின் குடும்பம்:

 

தனது குடும்பம் குறித்த விஷயங்களை கேமரா முன் அதிகம் பகிராதவர் மனோபாலா. இவரது மனைவியின் பெயர் உஷா. இவருக்கு ஒரு மகனும் உள்ளார், அவரது பெயர் ஹரிஷ். மனோபாலாவின் மகனுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. அப்போது திரையுலகினர் பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

 

இறுதிவரை சினிமா..

 

திரையுலகிற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும அர்பணித்தவர் மனோபாலா. பிரபல தொலைக்காட்சி நிகழ்சியான குக் வித் கோமாளி-3யில் பங்கேற்பாளராக வந்து தனக்கு நடிப்பு மட்டுமல்ல சமையலும் நன்றாகவே வரும் என்பதை நிரூபித்தார். கடந்த மாதம் கூட, ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிள்ளார் மனோபாலா. ஆனால், உடல் நலன் சரியில்லாத காரணத்தால் மேற்கொண்டு அப்படத்தின் படப்பிடிப்பில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. தன் வாழ்வின் இறுதிக்கட்டம் வரை, சினிமா..சினிமா..சினிமா..என்றிருந்த மனோபாலவை இந்த திரையுலகும் தமிழ் மக்களும் என்றும் மறக்க மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

மேலும் படிக்க | சித்ரா பவுர்ணமி நெருங்குகிறது! பொம்மிக்கு என்ன ஆகும்? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட

 

மேலும் படிக்க | தெய்வம் தந்த பூவே அப்டேட்: வினய், மித்ரா இடையே மீண்டும் மோதல், நடக்க போவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News