சிவகார்த்திகேயனின் "ஹீரோ" படம் டிசம்பர் மாதம் வெளியிட முயற்சி

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 7 ஆம் தேதி நிறைவடைய உள்ளதால், அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவர தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 2, 2019, 09:04 AM IST
சிவகார்த்திகேயனின் "ஹீரோ" படம் டிசம்பர் மாதம் வெளியிட முயற்சி

புதுடெல்லி: சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான சீமா ராஜா மற்றும் மிஸ்டர் லோக்கல் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால், சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான "நம் வீட்டு பிள்ளை" படம் நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன், மீண்டும் சிவகார்த்திகேயன் வெற்றி பாதைக்கு திரும்பினார். இப்போது, இயக்குனர் பி.எஸ். மித்ரானின் "ஹீரோ" படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். 

சமீபத்தில், படக்குழுவினர் "ஹீரோ" படத்தின் டீஸரை வெளியிட்டனர். இது பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களை பெற்றது. டீசரை பார்த்த பலர் படத்தின் கதைக்களம் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று பலர் சுட்டிக்காட்டினர்.

தற்போது "ஹீரோ" படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 7 ஆம் தேதி முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்றும், ஏற்கனவே படத்தின் முதல் பாதியின் எடிட்டிங் முடிந்துவிட்டதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நிறைவு செய்து, அடுத்து மாதம் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அனேகமாக "ஹீரோ" படம் டிசம்பர் 20 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்பட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பி.எஸ் மித்ரான் இயக்கத்தில் தயாராகி வரும் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுக நாயகி கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

More Stories

Trending News