கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்க்ள் போன்ற பாரதிராஜா படங்களில் ஹீரோவாக நடித்திருந்தவர், சுதாகர். நிறம் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியே, எங்க ஊறு ராசாத்தி போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு அங்கீகாரமும் அடையாளமும் கொடுத்தன. வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.
பெங்களூரு வாசி..
தனது இளமை காலத்தில் தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், பின்னர் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்றுவிட்டார். தற்போது சில முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் காமெடி ரோல்களிலும் நடித்து வருகிறார். இன்றுவரை தனது வித்தியாசமான நடிப்பால் பலரை ஈர்த்து வரும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். டோலிவுட் படங்களிலேயே பெரிதும் நடித்து வருவதால், அவர் நெடு நாட்களுக்கு முன்னலே பெங்களூரில் செட்டில் ஆகி விட்டார். இவருக்கு தற்போது 64 வயது ஆகிறது.
உயிரிழந்ததாக வதந்தி..
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருந்த சரத்பாபு. சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர் உயிரிழப்பற்கு முன்னர், மனோபாலா உயிரிழந்தார். அப்போது சரத்பாபுவும் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து சரத்பாபுவின் குடும்பத்தார் அவர் உயிருடன் இருப்பதாக விளக்கம் குடுத்த நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ள வைக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் சுதாகரும் சரத்பாபு இறந்த தினத்தன்று உயிரிழந்துள்ளதாக முன்பு போலவே வதந்திகள் பரவி வந்தன. ஆனால், அது உண்மையல்ல என நடிகர் சுதாகர் ஒரு வீடியோவை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க | வெள்ளி நிலவாக வெள்ளை நிற உடையில் ‘இந்தியன் 2’ பட நாயகி ரகுல் ப்ரீத் சிங்..!
నా పై రూమర్స్ నమ్మకండి.. నేను ఎలా ఉన్నానో చూడండి#comedian sudhakar#Tollywood@CinemaPosts pic.twitter.com/M7BVUVnVp9
— CINEMA POSTS (@CinemaPosts) May 25, 2023
வதந்திக்கு முற்றுப்புள்ளி
நடிகர் சுதாகர், தனது உடல் நிலை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார். “தயவு செய்து பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். எதையும் உண்மை அறியாமல் பகிரவோ பிறருக்கு அனுப்பவோ வேண்டாம்” என்று அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடரும் வதந்திகள்..
அனைத்து திரையுலகிலும் தற்போது வயதான நடிகர்களாக உள்ள பலரின் உடல்நலம் குறித்து தொடர் வதந்திகள் வெளியாகிவருகின்றன. தமிழில் நடிகர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் குறித்து அவ்வப்போது செய்திகள் பரவும். இந்த வகையான வதந்திகளில் சிக்கியோர் பின்னர் விளக்கமளிப்பதும் சில நாட்கள் கழித்து மீண்டும் வதந்திகள் பரவுவதும் வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக ஏதாவது ஒரு பிரபலத்தின் உயிரிழப்பின் போது இதுபோன்ற செய்திகள் பரவுவது வழக்கம். இதுபோலத்தான் நடிகர் சுதாகரின் செய்தியும் தற்போது பரவியுள்ளது. இவ்வாறான செய்திகள் பரப்புவாேர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பிரபலங்கள் சம்பந்த பட்டவர்களிடம் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | விரைவில் ஜான்விக் 5 பணிகள் தொடக்கம்..? வெளியானது எக்ஸ்க்ளூசிவ் தகவல்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ