விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 20, 2022, 06:58 PM IST
  • கோப்ரா படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது.
  • நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
  • கொரோனா சூழல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போனது.
விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! title=

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தமிழில் வரவிருக்கும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படம் 'கோப்ரா'.  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்து இருக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இர்பான் பதான், ரோஷன் மேத்தியூ, மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர், சிந்து ஷியாம், கன்னிகா சுப்பிரமணியன், பத்மப்ரியா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் விக்ரம் ஏழு கெட்டப்புகளில் நடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்!

கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.  கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இழுத்து கொண்டே சென்ற நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இருக்கிறது.  இப்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த இந்த படம் எப்போது வெளியாகும் என்கிற தகவலை படக்குழு அறிவித்துள்ளது.  அதன்படி, கோப்ரா படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியை வெளியாக இருப்பதாக படக்குழு கூறியுள்ளது.

 

ஏற்கனவே மே மாத இறுதியில் படம் வெளியாகும் என்று சில தகவல்கள் வெளியானது, ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால் தற்போது சுதந்திர தின வாரத்தையொட்டி இப்படம் வெளியாக போகிறது.  ஏற்கனவே வெளியான இப்படத்தின் பிரம்மாண்டமான டீசர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  மேலும் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் படம் செப்டம்பரில் வெளிவர உள்ளது.

மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News