மிரட்டலாக வெளியாகியுள்ள 'மகான்' படத்தின் டீசர்!

அமேசான் ப்ரைம் வீடியோ OTT தளத்தில் வெளியாகவுள்ள விக்ரம் நடிக்கும் 'மகான்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 01:48 PM IST
  • ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக மகான் உருவாகியுள்ளது
  • பிப்ரவரி மாதம் 10ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ OTT இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.
மிரட்டலாக வெளியாகியுள்ள 'மகான்' படத்தின் டீசர்! title=

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'மகான்' (Mahaan).  துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள, இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.  ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது.  சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

mahaan

ALSO READ | ஒரே வருடத்தில் வெளியாகபோகும் விக்ரமின் 4 படங்கள்!

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், நேபாளம், டார்ஜிலிங், சென்னை போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது.   இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.   மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ OTT இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.

maahaan

இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்ஸ் தினமும் வெளியானது.  இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  'கள்ளுக்கடையை ஒழிப்போம்' என்ற வசனத்துடன் இப்படத்தின் டீசர் தொடங்குகிறது, மதுவை ஒழிக்கவும், சுதந்திரத்திற்காகவும் போராடிய காந்தி மகான் போல வாழ வேண்டும் என இளம் வயதாக இருக்கும் விக்ரமிடம் அவரது தந்தை கட்டளையிடுகிறார்.  பின்னர் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுடன் டீசர் நகர்கிறது.  இந்த டீசர் ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்று வருகிறது.  நீண்ட நாட்களாக விக்ரம் படம் வெளிவராமல் இருந்த நிலையில் இப்படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது.

 

ALSO READ | மூன்று மொழிகளில் OTT-யில் வெளியாகும் மகான்! கதை இது தான்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News