விரைவில் காதலரை அறிமுகம் செய்யப்போகும் நடிகை கங்கனா ரணாவத்!

விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன்.  வரும் ஆண்டுகளில் குழந்தைகளை பெற்று நான் ஒரு தாயாக இருக்க ஆசைப்படுகிறேன். என்னை ஒரு தாயாக பார்க்க விரும்புகிறேன் என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார். 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 12, 2021, 03:52 PM IST
விரைவில் காதலரை அறிமுகம் செய்யப்போகும் நடிகை கங்கனா ரணாவத்!

கங்கனா ரணாவத் தனது நடிப்பு திறமையாலும் ,துணிச்சலான கருத்துக்களை கூறுவதாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பெண்களை மையமாக கொண்ட கதையம்சத்தில் அதிகமாக நடித்து புகழப்பட்டவர்களுள் ஒருவர்.   மேலும் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளுள் இவரும் ஒருவர் என்று ஊடக வழி செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபல நாளிதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய பிரபலங்கள் 100 பட்டியலில் நடிகை கங்கனா ரணாவத்தின் பெயரும் இடம்பெற்றிருந்து குறிப்பிடதக்கது. 

ALSO READ கிறிஸ்துமஸ் தினத்தில் DON? படக்குழுவின் சர்ப்ரைஸ் முடிவு!

இவர் சினிமா உலகில் தடம் பதித்து கிட்டதட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான 'தலைவி' திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுத்தந்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ரசிகர்கள் கண் முன்னே தத்ரூபமாக கொண்டுவந்து நிறுத்தினார்.  2020-க்கான பத்மஸ்ரீ விருதை கங்கனாவிற்கு அளித்து இந்திய அரசு கௌரவித்துள்ளது . பிலிம்பேர் விருது,தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். 2020-ம் ஆண்டில், னது சொந்த தயாரிப்பு நிறுவனமான "மணிகர்னிகா ஃபிலிம்ஸ்" என்பதைத் தொடங்கினார். 

kangana

மேலும் கங்கனா ரணாவத் நாட்டிலேயே சிறந்த உடை அணிந்த பிரபலங்களில் ஒருவராக புகழப்படும் சிறப்புக்குரியவர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.  எதிர்வரும் ஆண்டுகளில் நீங்கள் எவ்வாறு இருக்க விரும்புகிறீர்கள்? என்று கங்கனா ரணாவத்திடம் கேட்டதற்கு, அவர் ‘‘விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன்.  வரும் ஆண்டுகளில் குழந்தைகளை பெற்று நான் ஒரு தாயாக இருக்க ஆசைப்படுகிறேன். என்னை ஒரு தாயாக பார்க்க விரும்புகிறேன்'' என்று பதிலளித்தார். 

அவரது பதிலை தொடர்ந்து , அடுத்த கேள்வியாக உங்கள் வாழ்க்கையில் மனம் கவர்ந்த ஆண் யாரும் இருக்கிறாரா? என்று கேட்டதற்கு, அவர் ‘‘ஆம் இருக்கிறார். அவரைப் பற்றி விரைவில் அனைவருக்கும் தெரியபடுத்துவேன்'' என்று கூறினார்.

ALSO READ விக்ரமில் கமலின் மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News