க்யூட் குத்தாட்டம் போட்ட அதிதி... 'ஒல்லி பெல்லி'-யால் மயங்கிய நெட்டிசன்கள்!

Aditi Shankar Dance: நண்பன் படத்தின் ஒல்லி பெல்லி பாடலை பின்னணியாக வைத்து, நடிகை அதிதி ஷங்கர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது அதிகமாக பரவி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 29, 2023, 08:33 PM IST
  • அதிதி தற்போது சிவகார்த்திகேயன் உடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
  • இன்ஸ்டாகிராமில் அவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
க்யூட் குத்தாட்டம் போட்ட அதிதி... 'ஒல்லி பெல்லி'-யால் மயங்கிய நெட்டிசன்கள்! title=

Aditi Shankar Dance: பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்திக்கு ஜோடியாக 'விருமண்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. பாலிவுட்டில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய 'வாரிசு' பிரச்னை, கோலிவுட்டில் அதிதி மூலமாக மீண்டும் தொடங்கியது.  

ஷங்கரின் மகள் என்ற ஒரு காரணத்திற்காக அதிதிக்கு அதிக கவனம் கொடுக்கப்படுவதாகவும், அவர் நடிப்பு திறன் இன்னும் வெளிப்படவேயில்லை என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இது ஒருபுறம் இருந்தாலும், அவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதால், அதிதி அடிக்கடி வைரலாக தொடங்கினார். மேலும், அவர் நடிக்கும் பட அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகும்.

வெறும் வதந்தி

சமீபத்தில், இவர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ராம்குமாருடன் விஷ்ணு விஷால் மீண்டும் இணைய உள்ளார். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைவதற்கான வேலையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றன. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரை நடிக்க தயாரிப்பாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல்... முதல் பாகத்தை மிஞ்சியதா... இல்லையா?

ஆனால் நடிகையின் தரப்பில் இருந்து, அவர் படத்தின் இணையவில்லை என்று தெளிவுபடுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, விஷ்ணு விஷால் மற்றும் ராம் குமார் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது வெறும் வதந்தி எனவும் கூறப்பட்டது.

தீயாக பரவும் வீடியோ

அதிதி ஷங்கர் தற்போது சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் வருகிறார். இந்நிலையில், அதிதி ஷங்கர் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இந்த நடன வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் அதில் தங்களின் கருத்தையும் பதிவிட்டு அன்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம், நண்பன். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான 'ஒல்லி பெல்லி' பாடல் மிகவும் பிரபலமானது. இந்த ஒல்லி பெல்லி பாடலை பின்னணியாக வைத்து, அதிதி நடனமாடும் வகையில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோசூட் பணியின்போது, நடனமாடி, அதை இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு 28 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா ரங்கன் உள்ளிட்டோர் 'க்யூட்' என்ற ரீதியில் கமெண்ட் செய்துள்ளனர். ரசிகர்களும் இந்த வீடியோவை தங்களின் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து, இலியானாவையே மிஞ்சிவிட்டதாக ஹார்ட்டை தெறிக்கவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இன்று உயிரிழந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News