கைதி 2 வேலைகள் எப்போது தொடக்கம்?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

கைதி 2 படத்தின் வேலைகள் எப்போது தொடங்கப்படும் என்ற அப்டேட்டை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வெளியிட்டுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 12, 2022, 02:39 PM IST
  • கைதி 2 அப்டேட் வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு
  • விஜய் 67 படத்துக்கு பிறகு கைதி 2 படம் ஆரம்பம்
கைதி 2 வேலைகள் எப்போது தொடக்கம்?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் title=

மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்து கைதி, மாஸ்டர் என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமல் நடிப்பில் அண்மையில் இவர் இயக்கிய விக்ரம் படமும் ஹிட்டாகியுள்ளது.

இதனால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் லோகேஷ். கதையிலும், திரைக்கதையிலும் அதீத கவனம் செலுத்துவதால் மட்டும்தான் லோகேஷால் இப்படி வரிசையாக ஹிட் கொடுக்க முடிகிறது.

Kamal, Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் தொடர் ஹிட்டுகள் கொடுத்தாலும் அவருக்கு பெஞ்ச் மார்க் படமாக அமைந்தது கைதி படம்தான். காவல் துறையினரை ஒரு கைதி காப்பாற்றுகிறார் என்ற ஒன்லைனே சுவாரஸ்யமாக அமைந்தாலும் அதை அவர் திரைக்கதை ஆக்கிய விதம் பலரையும் மிரள வைத்தது.

கைதி படத்தின் டில்லி கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட். அப்படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான லீடை வைத்திருப்பார் லோகேஷ்.

அதேபோல் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, கைதி படத்தின் கதாபாத்திரங்களையும் இணைத்து ரோலக்ஸ் Vs டில்லி என்ற களத்தை அவர் அமைத்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி விக்ரம் கதாபாத்திரத்தையும் லோகேஷ் இனி வரும் படங்களில் தொடர்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Dilli

இது ஒருபுறமிக்க கைதி 2 படம் வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட காலமாகவே இருந்தது. கைதி 2 படம் உறுதிதான் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தாலும் அவர் விக்ரம் படத்துக்கு அடுத்ததாக விஜய் 67 படத்தை இயக்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார். எனவே கைதி 2 வேலைகள் எப்போதும் தொடங்கும் என்ற கேள்வியும் பலரிடம் எழுந்தது.

மேலும் படிக்க | உலகநாயகனுக்கு மெகா ஸ்டார் வைத்த விருந்து

இந்நிலையில் கைதி 2 படத்தின் வேலைகள் தொடர்பாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய அவர்,  “கைதி 2, கைதி படத்தை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். விஜய் 67 முடிந்ததும் கைதி 2க்கான வேலைகளை லோகேஷ் தொடங்குவார்” என்றார். இதனால் டில்லியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

மேலும் படிக்க | 'விக்ரம்' படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News