பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று: விரைவில் மீண்டு வருவேன் என இன்ஸ்டாவில் பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றி பதிவிட்ட அக்ஷய் குமார், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 4, 2021, 10:18 AM IST
  • பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி.
  • அக்‌ஷய் குமார் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
  • அக்‌ஷய் குமார் இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று: விரைவில் மீண்டு வருவேன் என இன்ஸ்டாவில் பதிவு title=

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றி பதிவிட்ட அக்ஷய் குமார், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தனது கோவிட் (COVID-19) பரிசோதனை அறிக்கைகள் தொற்றுக்கு சாதகமாக வந்துள்ளதாக தெரிவித்த அக்‌ஷய் குமார், தன்னுடன் தொடர்பு கொண்ட மற்றவர்களும் கொரோனா தொற்று பரிசோதனையை செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினார். அக்‌ஷய் குமார், நுஷ்ரத் பருச்சா மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் ராம்சேது படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களின் பல பாலிவுட் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை பார்த்து வருகிறோம். அமீர் கான், மாதவன், சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மற்றும் பலருக்கு கோரோனா தொற்று எற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

ALSO READ: மாஸ்டர் பிளாஸ்டர் Sachin Tendulkar-க்கு கொரோனா தொற்று: ட்விட்டர் மூலம் செய்தியை பகிர்ந்தார்

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதைப் பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அக்‌ஷய் குமார் (Akshay Kumar), “எனது கோவிட் -19 பரிசோதனை முடிவுகளில், எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். தேவையான மருத்துவ உதவியை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதித்துக் கொள்ளும்படி நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டும் என் பணிகளைத் தொடருவேன்” என்று எழுதியுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

இதற்கிடையில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சனிக்கிழமை (ஏப்ரல் 3, 2021) மாலை இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள COVID-19 தடுப்பூசி அளவுகளின் மொத்த எண்ணிக்கை 7.44 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்தது.

தற்காலிக அறிக்கையின்படி சனிக்கிழமை இரவு 8 மணி வரை மொத்தம் 7,44,42,267 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய COVID-19 தடுப்பூசி செயல்முறை தொடங்கப்பட்டது. முதன் முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத்  தொடர்ந்து பிப்ரவரி துவங்கிய இரண்டாவது கட்டத்தில் முன்னணிப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த கட்ட COVID-19 தடுப்பூசி செயல்முறை மார்ச் 1 முதல் தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோயால் அவதிப்படும் 45 வயதுக்கு மெற்பட்டவர்களுக்கும் இதில் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஏபர்ல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ALSO READ: Shocking: புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News