ஆர்யாவின் கேப்டன் படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்

ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்டன் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 17, 2022, 05:28 PM IST
  • கேப்டன் பட ஓடிடி உரிமையை கைப்பற்றியது அமேசான்
  • 20 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம்
  • ஆர்யா படங்களிலேயே இந்தப் படத்தின் வியாபாரம்தான் அதிகம்
 ஆர்யாவின் கேப்டன் படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம் title=

ஆர்யா நடிப்பில் டெடி திரைப்படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ஆர்யாவை வைத்து டெடி படத்தை இயக்கியுள்ளார். மிருதன், டிக் டிக் டிக் படங்களைப் போன்று இந்தத் திரைப்படத்திலும் வித்தியாசமான கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். 

இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்  கைப்பற்றியுள்ளது. அதேபோல், தற்போது கேப்டன் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

Captain

மேலும், தென்னிந்திய மொழிகளுக்கான கேப்டன் பட உரிமை மட்டும் 24 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரை ஆர்யா நடிப்பில் வெளியான எந்த திரைப்பமும் டெடி படம் போல் டிஜிட்டல் உரிமை விற்பனையாகவில்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

மேலும் படிக்க | சிம்புவை மணக்கிறாரா பிரபல சீரியல் நடிகை? இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரல்

இந்த திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு பிறகு அமேசான் தளத்தில் வெளியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிகிறது.

Captain

டி. இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில், சிம்ரன்,'ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கின்றனர். யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

மேலும் படிக்க | தலைக்கு மேல் இருக்கும் திருமண ஏற்பாடுகள்... கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நோ சொன்ன நயன்தாரா

படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபிள் நிறுவனமும், திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News