தலைக்கு மேல் இருக்கும் திருமண ஏற்பாடுகள்... கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நோ சொன்ன நயன்தாரா

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா கலந்துகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 17, 2022, 05:12 PM IST
  • ஜூன் இரண்டாவது வாரத்தில் நயன்தாரா திருமணம்
  • கேன்ஸ் திரைப்படவிழாவில் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை
தலைக்கு மேல் இருக்கும் திருமண ஏற்பாடுகள்... கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நோ சொன்ன நயன்தாரா title=

ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கென்று சர்வதேச சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு. இந்தத் திரைப்பட விழாவில் தாங்கள் கலந்துகொள்வதையும், தங்களின் படம் அந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுவதையும் சினிமா கலைஞர்கள் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறார்கள். 

அந்தவகையில்,இந்தாண்டு 75ஆவது கேன்ஸ் திரைப்பட விழா (இன்று) மே 17ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதிவரை நடக்கிறது. அந்த விழாவில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த  பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், பாலிவுட் நடிகர் நவாஸூதின் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது.

Nayan, Viki

இந்நிலையில் நடிகை நயன்தாரா கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டார் என தெரியவந்துள்ளது. விக்னேஷ் சிவனை நீண்ட நாள்களாக காதலித்துவரும் நயன், அவரை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் அதற்கான தீவிர ஏற்பாடுகளில் அவரும், விக்னேஷ் சிவனும் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

Cannes

மேலும், திருமண ஏற்பாடுகள் நிறைய இருப்பதால் நயன்தாரா கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தலைவர் 169... பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News