அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவை ஜெயிக்க வைத்து அதிர்ச்சி கொடுத்த சிதம்பரம்.‌. நடித்தது என்ன

Amudhavum Annalakshmiyum Today's May 15 Episode Update: அமுதாவை ஜெயிக்க வைத்து அதிர்ச்சி கொடுத்த சிதம்பரம்..நடித்தது என்ன..அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 15, 2023, 12:06 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவை ஜெயிக்க வைத்து அதிர்ச்சி கொடுத்த சிதம்பரம்.‌. நடித்தது என்ன title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பழனி மற்றும் அமுதா என இருவரும் சமமாக ஓட்டுகள் வாங்கியிருந்த நிலையில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஓட்டு சிதம்பரமிடம் இருந்தது.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: ஆல்பம் ஃபோட்டோவில் காத்திருந்த அதிர்ச்சி, சீதாவுக்கு சவால்!!

இந்த நிலையில் பள்ளிக்கூடத்திற்கு சிதம்பரம் வருகை தந்து அவருடைய ஓட்டை பதிவு செய்கிறார். பிறகு அவர் அமுதாவுக்கு ஓட்டு போட்டதாக விஷயம் தெரிய வர அமுதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அமுதா உட்பட அனைவரும் சந்தோஷம் அடைய உமா பழனி டீம் அதிர்ச்சி அடைகிறது. அப்பா சிதம்பரம் தனக்காக ஓட்டு போட்டதை நினைத்து அமுதா சந்தோஷமாக இருக்கிறாள். 

இந்த சமயத்தில் சிதம்பரம் அமுதாவிடம் இந்த ஓட்டு உன்மேல இருக்கிற பாசத்துல போட்டது கிடையாது, உமா மேல இருக்கிற வெறுப்பில் போட்டது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். 

அது மட்டுமல்லாமல் உமா மற்றும் பழனியை மிரட்டும் சிதம்பரம் உமாவுக்கு ஓட்டு போடலனா விஷம் குடித்து விடுவேன் என மிரட்டிய நாகுவிடம் விஷத்தை குடிச்சிரு என அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News