தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி திட்டத்தின் படி சனியன் நிர்வாகிகளின் 20 குழந்தைகளையும் கடத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்க சௌந்தரபாண்டி முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்கிறார். பிறகு பரணி வேட்பு மனு செய்ய போக அவளிடம் அடையாள அட்டையை கேட்க அதை கொண்டு வராத பரணி ஷண்முகம் என் ஆதார் கார்டு எங்க? என்று கேட்க அவன் நான் எடுத்துட்டு வரல என்று சொல்கிறான்.
இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு, அதுக்குள்ள வேட்புமனு தாக்கல் செய்யணும் இல்லனா நீங்க தேர்தலில் நிற்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்க ஷண்முகம் ஆதார் கார்டை எடுத்து வர வீட்டிற்கு கிளம்பி வருகிறான், ஷண்முகம் திரும்ப வர நேரமாக சௌந்தரபாண்டி அவன் வரலைனா என்ன அன்னபோஸ்ட்டா தேர்வு பண்ணிடுவாங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறான்.
மேலும் படிக்க | தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்
கடைசியில் நேரம் முடிந்து விட்டது என்று சொல்ல பரணி கடைசியாக 5 நிமிஷம் நேரம் கேட்கிறாள், நேரம் முடிய போகும் கடைசி நிமிடத்தில் ஷண்முகம் என்ட்ரி கொடுக்க பரணி வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் தொடங்க எல்லாரும் சௌந்தரபாண்டிக்கு ஓட்டு போடுவது போலவே தோன்றுகிறது.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?
அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ