பரணி வைத்த செக்மேட்! ஜீ தமிழ் அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Update: நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மற்றும் ரத்னா ஆகியோர் வெங்கடேஷை தேடி கண்டுபிடித்து கல்யாணத்துக்கு நாள் குறித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

Written by - RK Spark | Last Updated : Dec 7, 2023, 12:39 PM IST
  • துப்பாக்கியுடன் வந்து அதிர்ச்சி கொடுத்த ஷண்முகம்.
  • பரணி வைத்த செக்மேட்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
பரணி வைத்த செக்மேட்! ஜீ தமிழ் அண்ணா சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மற்றும் ரத்னா ஆகியோர் வெங்கடேஷை தேடி கண்டுபிடித்து கல்யாணத்துக்கு நாள் குறித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஷண்முகம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது எதிரே முத்துப்பாண்டி கீழே வேலை செய்யும் போலீஸ் காரர் முப்பிடாதி வர அவரிடம் துப்பாக்கியை வாங்கி சுடப்போவது போல் பார்க்க அவர் அதில் குண்டு இருக்கு என பதற ஷண்முகம் துப்பாக்கியை எடுத்து கொண்டு வந்து சௌந்தரபாண்டி வீட்டில் இறங்குகிறான். 

anna

மேலும் படிக்க | பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!

துப்பாக்கி முனையில் மிரட்டி முத்துபாண்டியை சுட ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகுகிறான். உடனே அவன் துப்பாக்கியை எடுத்து சண்முகத்தை சுட போக குறி தவறி சனியனில் கையில் சுட்டு விடுகிறான். இனிமே என் தங்கச்சி வாழ்க்கையில் தலையிட்டா அவ்வளவு தான் என வார்னிங் கொடுத்து விட்டு ஷண்முகம் வெளியே வர சனியன் வலியில் என்னை காப்பாத்துங்க என கதற முத்துப்பாண்டி அதெல்லாம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக முடியாது. 

யார் சுட்டது என்ன என்பது குறித்து விசாரித்தால் என்னுடைய வேலை போய்டும் என சொல்ல சனியன் அப்போ என் உயிரை யார் காப்பாத்துவா என்று கேட்க பரணியை கூப்பிட்டு கட்டு போட சொல்வதாக சொல்கிறான். பிறகு சிவபாலன் இங்கே வீட்டிற்கு வந்து நடந்ததை சொல்லி பரணியை கூட்டி போக அவள் இது போலீஸ் கேஸ். போலீஸ் ஸ்டேஷனலில் தகவல் கொடுத்து தான் சிகிச்சை கொடுக்கணும் என சொல்ல முத்துப்பாண்டி அப்படி பண்ணா என் வேலை போய்டும், கட்டு போடு என மிரட்ட பரணி முடியாது என ஷாக் கொடுக்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கேஜிஎப் 3 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி! ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல் இல்லை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News