"தானா சேர்ந்த கூட்டம்" இசை வெளியீடு தேதி அறிவிப்பு!

இப்படத்தின் பாடல்கள் வரும் ஜனவரி., 3-ஆம் நாள் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்

Last Updated : Dec 30, 2017, 08:26 PM IST
"தானா சேர்ந்த கூட்டம்" இசை வெளியீடு தேதி அறிவிப்பு! title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்".

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் ஜனவரி., 3-ஆம் நாள் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார். இதற்கான முன்னோட்டத்தினையும் அவர் பகிர்ந்துள்ளார்!

இந்தப் படத்தின் முதல் பாடலான "நானா தானா", "பீல பீல" மற்றும் ''சொடக்கு மேல சொடக்கு'' பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

"தானா சேர்ந்த கூட்டம்" டைட்டில் இசை​ முன்னோட்டம்!

Trending News