FTII தலைவராக அனுபம் கெர் நியமனம்!!

Last Updated : Oct 11, 2017, 04:00 PM IST
FTII தலைவராக அனுபம் கெர் நியமனம்!! title=

மகாராஷ்டிரா மாநிலமான புனேவில் இருக்கும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக்கல்லூரியின் தலைவராக திரைப்பட இயக்குனர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் புகழ்பெற்ற பல திரைத்துறை நட்சத்திரங்கள் இந்த கல்லூரியில் படித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு இக்கல்லூரியின் தலைவராக கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்ட போது பல்வேறு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட இயக்குனர் அனுபம் கெர் அந்த பதவிக்கு இன்று நியமனம் ஆகி உள்ளார். 

Trending News