விக்ரமின் புதிய படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல் ARR!

சியான் விக்ரம் நடிப்பில் உறுவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது!

Updated: Jul 13, 2019, 02:36 PM IST
விக்ரமின் புதிய படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல் ARR!

சியான் விக்ரம் நடிப்பில் உறுவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது!

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தனது 58-வது திரைப்படத்தில் நடிக்கின்றார்.

இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், படத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்துள்ளது. புதுமுக நடிகர்கள் பலரை இத்தயாரிப்பு நிறுவனம் இப்படத்தில் அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், விக்ரமின் 58-வது படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.