நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில், இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான வர்மா திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
தெலுங்கு மொழில் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைப்போட்ட திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை நடிகர் துருவ் நடிப்பில் தமிழில் வர்மா என்னும் பெயரில் B Studios நிறுவனம் தயாரித்தது. விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Press Release. #Varmaa @e4echennai @cvsarathi @DhruvVikramFans @DhruvUniverse @DhruvOff @E4Emovies pic.twitter.com/hmb2HW8qoB
— E4 Entertainment (@E4Emovies) February 7, 2019
தெலுங்கில் E4 Entertainment தயாரிக்க, இயங்குநர் சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். இப்படத்தினை தமிழில் வெளியிட விரும்பிய இந்நிறுவனம் இயக்குநர் பாலா தலைமையில் செயல்மடும் B Studios நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின் படி இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க தமிழில் வர்மா என்னும் பெயரில் உருவானது. வெளியீடு வரை இத்திரைப்படம் வந்த நிலையில் தெலுங்கு பதிப்பில் இருந்து தமிழ் பதிப்பு வேறுபட்டிருப்பதாக கூறி வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2019-ஆம் ஆண்டிற்குள் புது குழுவுடம் திரைப்படம் தமிழில் மீண்டும் உருவாக்கப்படும் எனவும், நாயகனாக துருவ் நடிப்பார் எனவும், மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் E4 Entertainment தெரிவித்துள்ளது.