பான் இந்தியா வெளியீடாக வரும் 'பனராஸ்' - செப்.26இல் டிரைலர்!

கன்னட இயக்குநர் ஜெயதீர்த்தா தயாரிப்பில், புதுமுக நடிகர் நடித்துள்ள 'பனாரஸ்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வரும் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 22, 2022, 06:33 PM IST
  • பனாரஸ் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
  • இத்திரைப்படம் வரும் நவ. 4ஆம் தேதி வெளியாகிறது.
  • இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றும் முன்னரே வெளியாகியுள்ளது.
பான் இந்தியா வெளியீடாக வரும் 'பனராஸ்' - செப்.26இல் டிரைலர்! title=

கன்னட முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான ஜெயதீர்த்தாவின் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்திய அளவில் ரிலீஸ் ஆகும் இத்திரைப்படத்தில் கதநாயகனாக அறிமுக நடிகர் ஜையீத் கான் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். 

இவர்களுடன் பிரபல கன்னட நடிகர்கள் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். அஜனீஷ் லோக்நாத், நடிகர் விதார்த் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான 'குரங்கு பொம்மை' திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். 

மேலும் படிக்க | 'ஐஸ்வர்யா ராய் ஒரு தெய்வப்பிறவி' - வாயை பிளக்கும் இணையவாசிகள்; இந்த போட்டோவுக்கா?

இந்துகளின் புனித தலமான காசியை கதைக்களமாக கொண்டு, உருவாகியிருப்பதால்,'பனாரஸ்' என்ற காசியின் மற்றொரு பெயரை இத்திரைப்படத்திற்கு சூட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும், இத்திரைப்படம் காதலை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

வரும் திங்கட்கிழமை (செப். 26) மாலை 6.21 மணியளவில் பனாரஸ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியிடப்படும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக, படத்தின் சிங்கிள் ட்ராக் கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அப்பாடலை நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி வெளியிட்டிருந்தார். 'மாய கங்கா' என்ற பெயரில் வெளியான அந்த பாடலை தமிழில் பாடலாசிரியர் பழனி பாரதி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதன் பின், கடந்த செப். 16ஆம் தேதி மற்றொரு பாடலும் வெளியாகியது. 

மேலும் படிக்க | ‘பிரின்ஸ்’ படத்தின் 2வது பாடல் : நாளை மாலை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News