மன்னிப்பா, மீண்டும் சர்ச்சையா? - 'சக திரைநாயகி திரிஷாவே' மன்சூர் பரபர அறிக்கை

Trisha Mansoor Ali Khan Issue: திரிஷா குறித்து பேசிய கருத்துகளுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், அச்சம்பவத்திற்கு மன்சூர் அலிகான் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 24, 2023, 11:06 AM IST
  • ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று மன்சூர் ஆஜரானார்.
  • இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு - மன்சூர் அலிகான்
  • காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார் - மன்சூர் அலிகான்
மன்னிப்பா, மீண்டும் சர்ச்சையா? - 'சக திரைநாயகி திரிஷாவே' மன்சூர் பரபர அறிக்கை title=

Trisha Mansoor Ali Khan Issue: நடிகர் திரிஷா குறித்து சக நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் பல்வேறு தரப்பினர் இடையே கண்டனத்திற்குள்ளானது. மேலும், ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்தும் மன்சூர் அலிகான் அதில் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தேசிய மகளிர் ஆணையம் கேட்டு கொண்டதன்படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, நேற்று ஆயிரம் விலக்கு காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகானிடம் (Mansoor Ali Khan) போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில், நீண்ட நாள்களாக தான் மரியாதைக்குறைவாக பேசவில்லை எனவும், பேசியதில் சிறிய வீடியோவை மட்டுமே திரிஷாவிடம் சிலர் காட்டியுள்ளதாகவும் தொடர்ந்து சொல்லி வந்தார். இந்நிலையில், தற்போது தனது முடிவில் இருந்து மாறி திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மன்சூர் வெளியிட்ட அறிக்கை

அந்த அறிக்கையில், "ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!. ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்! எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானாரா மன்சூர் அலிகான்? 1996-ல் நடந்தது என்ன?

எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். 

காவல் அதிகாரி அம்மையார், திரிஷாவின் (Trisha) மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!. சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண், மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. 

சக்தி கொடு...!

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்துவிட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம்.

மேலும் படிக்க | மன்சூர் அலிகானை நீக்குகிறதா நடிகர் சங்கம்?

மன்னித்துவிடு

மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவலும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணில் இருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றர் நபிகளார் அவர்கள். பெண்மை புனிதம், காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8' வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10, ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்! 

எனது சக திரைநாயகி திரிஷாவே, என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்" என்றார். 

மேலும் படிக்க | விசித்ரா பேசியது இந்த நடிகரை பற்றி தானா? வலுக்கும் கண்டனங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News