ஆகஸ்ட் மாதத்தில் வெளியான 5 முக்கிய படங்கள்! பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்?

Big Tamil Movies August 2024 Box Office Collection : இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5 படங்கள் வெளியாகின்றன. இதில், எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் பெற்றிருக்கிறது தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 30, 2024, 01:32 PM IST
  • ஆகஸ்ட் மாதம் வெளியான முக்கிய 5 படங்கள்
  • பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்?
  • நல்ல விமர்சனத்தை பெற்ற படங்கள்..
ஆகஸ்ட் மாதத்தில் வெளியான 5 முக்கிய படங்கள்! பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்?  title=

Big Tamil Movies August 2024 Box Office Collection : இந்த ஆண்டில் (2024), முதல் ஆறு மாதங்கள் வரை பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜூலை மாதத்திற்கு பிறகுதான் ஒவ்வொரு படங்களாக வெளியாக ஆரம்பித்தன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பல முக்கிய படங்கள் வெளியாகின. அதில், முக்கியமான 6 படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

அந்தகன்:

பிரசாந்த் நடிப்பில் உருவாகி, பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த படம் அந்தகன். இந்தியில் இருந்து தமிழில் ரீ-மேக் ஆன இந்த படத்தில், பிரசாந்துடன் இணைந்து பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருந்தார். சிம்ரன், வில்லியாக நடித்திருந்தார். இப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரிலீஸான மூன்று நாட்களிலேயே சுமார் 2.59 கோடி வரை வசூலை ஈட்டியது. மொத்தமாக இப்படம், சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. 

தங்கலான்:

ஆகஸ்ட் மாதம் வெளியான இன்னொரு பெரிய படங்களுள் ஒன்று தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். பார்வதி திருவோது, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் இதில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக., 15ஆம் தேதி ரிலீஸான இப்படம் தற்போது ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

டிமான்டி காலனி 2:

டிமான்டி காலனி 2 திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இப்படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் வெளியானது. 2015ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் தொடர்ச்சி கதையாக இப்படம் வெளியாகி இருந்தது. இதிலும் அருள்நிதிதான் ஹீரோவாக நடித்திருந்தார். உடன், பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இப்படம், இப்போது வரை தற்போது உலகம் முழுவதும் 55 கோடி அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?

கொட்டுக்காளி:

சூரி-அன்னா பென் நடிப்பில் வெளியான படம், கொட்டுக்காளி. இந்த படம், ஆக., 23ஆம் தேதி வெளியானது. சாதிய ஒடுக்குமுறைகளை புதுமையாக இப்படம் மூலம் கூறியிருந்தார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ். இதனை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இப்படம், தற்போது வரை சுமார் 1 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 

வாழை:

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் படங்களுள் ஒன்றாக இருககிறது, வாழை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம், செலிப்ரிட்டிகள், முன்னணி இயக்குநர்கள், விமர்சகர்கள், பொது மக்கள் என அனைவரது மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இதில் நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும், கொட்டுக்காளி படத்துடன் சேர்ந்து அதே நாளில் வெளியானது. தற்போது வரை, இப்படம் ரூ.16 கோடியை தாண்டி வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | வாழை vs கொட்டுக்காளி! பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? எந்த படம் ஹிட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News