‘நிறம் தாண்டி நிஜம் பார்ப்போம்’: Bigg Boss வீட்டில் நிலவாய் ஜொலிக்கும் நிஷா!!

‘அழகுக்கும் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்ற அருமையான கருத்தை தன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மூலமே ஆணித்தரமாக மனதில் பதிய வைத்தார் நிஷா.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 7, 2020, 04:18 PM IST
  • நேற்றைய எபிசோடில் Bigg Boss போட்டியாளர்களுக்கு ஒரு task வழங்கப்பட்டது.
  • திரையில் காணும் பிரபலங்களின் பின்னால் இருக்கும் உண்மையான முகங்கள் என்ன என்பதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் task-ன் நோக்கம்.
  • நம் பலவீனத்தை நம் பலமாக்கிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்-நிஷா
‘நிறம் தாண்டி நிஜம் பார்ப்போம்’: Bigg Boss வீட்டில் நிலவாய் ஜொலிக்கும் நிஷா!!

Bigg Boss 4 நிகழ்ச்சி பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கி வழக்கம் போல் களைகட்டியுள்ளது. மக்கள் எதிர்பார்த்த பலர் வீட்டிற்குள் சென்றிருக்க, சிலர் ஏமாற்றியும் உள்ளார்கள். யாருமே எதிர்பார்க்காத சிலரும் Bigg Boss வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.

இப்போதுதான் Bigg Boss வீட்டு போட்டியாளர்கள் (Bigg Boss Contestants) மெதுவாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் Bigg Boss போட்டியாளர்களுக்கு ஒரு task-ஐ அளித்தார். அனைவரும் தாங்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான தருணங்கள், முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த task.

இதன் மூலம் ஒவ்வொருவரைப் பற்றியும் மற்றவர் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், திரையில் காணும் பிரபலங்களின் பின்னால் இருக்கும் உண்மையான முகங்கள் என்ன, அவர்கள் அனுபவித்த சவால்கள் என்னென்ன என்பதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் task-ன் நோக்கம்.

இதில் பல போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்துள்ள பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதில் அறந்தாங்கி நிஷா (Aranthangi Nisha) கூறிய சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இதுவரை பலரை சிரிக்க வைத்துள்ள நிஷா நேற்றைய எபிசொடில் அனைவரையும் கலங்கவைத்தார். ஆனால், அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் நிதர்சனமான உண்மை. தனது கருப்பு நிறம் காரணமாக தான் சிறு வயது முதல் பட்ட அவமானங்களை அவர் தைரியமாகத்தான் கூறினார். கேட்பவர்களுக்குத் தான் மனம் கலங்கிப் போனது.

எப்போதும் கிண்டலும், கேலியுமாக உலா வரும் இந்த அறந்தாங்கி நிஷாவுக்குள் இத்தனை சோகங்களா, இத்தனை உறுதியா, இத்தனை வைராக்கியமா என ரசிகர்கள் வியந்தார்கள், அவரை வாழ்த்தினார்கள்.

‘அழகுக்கும் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்ற அருமையான கருத்தை தன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மூலமே ஆணித்தரமாக மனதில் பதிய வைத்தார் நிஷா. நம் நாட்டில் இன்றும் கருப்பு நிறம் கொண்டவர்கள் மோசமாக நடத்தப்படுவதும், ஒதுக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ALSO READ: Bigg Boss Tamil 4, day 1 highlights: இந்த சீசனின் முதல் கேப்டனாக ரம்யா பாண்டியன் பரிந்துரை

அப்படிப்பட்ட பாரபட்சத்தை அனுபவிப்பவர்களுக்கு நிஷா ஒரு எடுத்துக்காட்டு….

அப்படிப்பட்ட பாரபட்சத்தைக் காட்டுபவர்களுக்கு நிஷா ஒரு சவுக்கடி…..

‘என்னை ஒதுக்கியவர்கள், பின்னுக்குத் தள்ளியவர்கள் எல்லோரும் பின்னால் நிற்க, அவர்கள் அண்ணாந்து பார்க்கும் நிலையில் நான் இன்று உள்ளேன்’ என அவர் கூறியபோது அவர் முகத்தில் காணப்பட்ட பெருமிதம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்.

நம் பலவீனத்தை நம் பலமாக்கிக்கொண்டு நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அவர் சாதாரணமாகக் கூறிவிட்டார். ஆனால் அது எத்தனை பெரிய தத்துவம்? எவ்வளவு பேரால் அப்படி செய்ய முடியும்? செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். அதற்கு பிக் பாஸ் வீட்டில் தற்போது தன் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் நிஷா ஒரு எடுத்துக்காட்டு.

இதுவரை சிரிக்க வைத்த நிஷா, பிக் பாஸ் வீட்டில் நேற்று நம்மை சிந்திக்க வைத்தார். மற்றவர்களது மகிழ்ச்சிக்கு காரணமாயிருந்த நிஷாவின் நேற்றைய பேச்சு இனி ஒரு எழுச்சிக்கு காரணமாய் இருக்கட்டும்!!

ALSO READ: Bigg Boss Tamil 4: COVID-19 முன்னணி வீரர்களை கமல்ஹாசன் கௌரவித்தார்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News