கொலை செய்து விடுவேன் என முன்னாள் கணவர் மிரட்டுகிறார்: கானா பாடகி இசைவாணி புகார்

சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இசைவாணி போட்டியாளராக பங்கேற்றார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 8, 2022, 11:15 AM IST
  • முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி புகார்.
  • கொலை மிரட்டல் அளிப்பதாக புகாரில் கூறியுள்ளார்.
  • பலரிடம் என்னை நிகழ்ச்சியில் பாட வைப்பதாக கூறி முன்தொகை வாங்கி மோசடி செய்துள்ளார்: இசைவாணி.
கொலை செய்து விடுவேன் என முன்னாள் கணவர் மிரட்டுகிறார்: கானா பாடகி இசைவாணி புகார் title=

தனது முன்னாள் கணவர் தன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக பிக் பாஸ் புகழ் கானா பாடகி இசைவாணி புகார் அளித்துள்ளார். 

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவன தயாரிப்பில் ’கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கானா பாடகி இசைவாணி. பிபிசி தேர்ந்தெடுத்த 100 சாதனைப் பெண்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. 

சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றிருந்தார். 

இந்நிலையில் இசைவாணி (Isaivani) தனது முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பபுலு மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “‘கடந்த ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு சதீஷ் என்பவரோடு திருமணம் நடந்தது. அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்து பெற்றேன். விவாகரத்து ஆன பிறகும் சதீஷ் என்னை மனைவி என்று மீண்டும் கூறிக்கொண்டு சமூக வலைதளப் பக்கங்கள் உருவாக்கி மோசடியில் ஈடுபடுகிறார்.

எனது பெயரை பயன்படுத்தி ஆர்கெஸ்ட்ரா மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் சதீஷ், பலரிடம் என்னை நிகழ்ச்சியில் பாட வைப்பதாக கூறி முன்தொகை வாங்கி மோசடி செய்துள்ளார். 

எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் எனது முன்னாள் கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது, தொடர்ந்து இதுபோன்று தான் செயல்படுவேன் எனவும் , முகத்தில் ஆசிட் வீசுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | 'ரௌடி' பேபிக்கு 'கார்த்திக்' புகழ் திவ்யாவின் அட்வைஸ்

ALSO READ | மகா காந்திக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் - விஜய் சேதுபதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News