வெறித்தனம் செய்ய காத்திருக்கும் ரசிகர்கள்..!! வரும் 12 ஆம் தேதி பிகில் ட்ரைலர்..!!

வரும் அக்டோபர் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) "பிகில்" படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Oct 7, 2019, 06:42 PM IST
வெறித்தனம் செய்ய காத்திருக்கும் ரசிகர்கள்..!! வரும் 12 ஆம் தேதி பிகில் ட்ரைலர்..!!
Pic Courtesy : ANI

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று "அட்லி" இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "பிகில்" ஆகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்க போட்டு போட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக "பிகில்" படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) "பிகில்" படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது.

"பிகில்" திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ளத்தால், இதுவரை டீசர் ஏன் வெளியாகவில்லை? எப்பொழுது வெளியாகும்? படத்தின் அப்டேட் என்ன? போன்ற கேள்விகளுடன் விஜய் ரசிகர்கள் தினமும் சமூக வலைத்தளம் மூலம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் கேட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று "பிகில்" படத்தின் ட்ரைலர் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அறிவித்த சில மணி நேரங்களில் #BigilTrailer என்ற ஹெஷ்டேக் ட்விட்டரில் டிரேண்டிங் ஆனது.

 

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. ஆளும் அரசை சார்ந்த சில அமைச்சர்கள் விஜய்-க்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.