அடுத்த படத்தில் தனுஷை இயக்கும் நெல்சன்

'தலைவர் 169' படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் நடிகர் தனுஷை வைத்து ஒரு டார்க் காமெடி படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 23, 2022, 12:44 PM IST
  • நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி இருந்தார்.
  • தற்போது ரஜினியை வைத்து அடுத்த படம் இயக்க உள்ளார்.
  • அடுத்ததாக தனுஷை வைத்து படம் பண்ண இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த படத்தில் தனுஷை இயக்கும் நெல்சன் title=

டார்க் காமெடி கதையம்சத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படம் சிறந்த வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.  இந்த இரண்டு படங்களின் வெற்றி அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜயை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு கொண்டு சென்றது.  நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய 'பீஸ்ட்' படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.  படம் வெளியாவதற்கு முன்னர் ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்து வந்தது.

Nelson , Vijay

மேலும் படிக்க | இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நாக சைதன்யா! மணப்பெண் யார்

இருப்பினும் படம் பாக்ஸ் ஆபிசில் கலெக்ஷனை அள்ளியதாக படத்தின் தயாரிப்பு குழு தெரிவித்தது.  இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் 'தலைவர் 169' படத்தை இயக்கவிருக்கிறார், இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவிருக்கிறது.  இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அவருக்கே உரித்தான டார்க் காமெடி கதையம்சம் நிறைந்த படம் ஒன்றில் நடிகர் தனுஷை வைத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தனுஷிற்கென்றே ஒரு கதையை இவர் உருவாக்கி வைத்திருந்ததாகவும், அந்த கதையை தனுஷிடம் கூற கதை பிடித்துப்போன அவர் உடனடியாக ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகர் தனுஷ் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்திலும், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.  அதனை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், இப்படம் இறுதிக்கட்ட பணியில் உள்ளது.  அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார், இப்படத்திற்கு பிறகு தான் நெல்சன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.  இருப்பினும் நெல்சனுடன் தனுஷ் பணியாற்றபோவது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | விக்ரம் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் வெளியான தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News