தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் உதயநிதியை வைத்து சில வருடங்களுக்கு முன்பு சைக்கோ என்ற படத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் படம் பெற்றது. இருப்பினும் படத்தை பலரும் ரசிக்கவே செய்தனர். குறிப்பாக இளையராஜாவின் இசையில் வெளியான உன்னை நினைச்சு நினைச்சு பாடல் பலரது ஃபேவரைட். படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான லீட் இருப்பது போல் இருந்ததால் சைக்கோ 2 உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது.
இந்தச் சூழலில் தடையறத் தாக்க, மீகாமன், தடம் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மகிழ் திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து கலகத் தலைவன் என்ற படத்த இயக்கியிருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
#KalagaThalaivan trailer and audio launch event has begun, and the energy over here is splendid @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @ArrolCorelli @MShenbagamoort3 #RArjunDurai @kalaignartv_off @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/7KN4UuzLMC
— Red Giant Movies (@RedGiantMovies_) November 10, 2022
விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், உதய் ஒரு மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் அவர் அவ்வளவு எளிமையானவர்.உதயநிதி தனது தொழில் மற்றும் அரசியலில் மைல் கற்களை எட்டியிருந்தாலும், அவர் மனதால் மாறவில்லை என்றார். மேலும் சைக்கோ படம் குறித்து பேசிய மிஷ்கின், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகாது. விரைவில் ஒரு சிறந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.
மேலும் படிக்க | நான் நடிப்பதே இல்லை - கலகத் தலைவன் உதயநிதி ஸ்டாலின்
மேலும் படிக்க | ஆடை சர்ச்சை...வீடியோவில் பொய் சொன்ன சதீஷ் - பதிலடி கொடுத்த தர்ஷா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ