கொரோனா தொற்றுநோயை மனதில் கொண்டு சமூக தொலைவை கடைபிடித்து ஒரு திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. ஸ்வீடனின் கோடெபோர்க் திரைப்பட விழா (Sweden’s Goteborg Film Festival) ஒரு தொலைதூர தீவில் திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பை கொடுக்கவிருக்கிறது.
திரைப்பட ரசிகர் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். அவர் சமூக தொலைவை (Social Distancing) கடைபிடித்து தொலைதூரத்தில் ஒரு தீவில் தனியாக 7 நாட்கள் இருந்து திரைப்படம் பார்க்க வேண்டும்,
2021ஆம் ஆண்டின் கோடெபோர்க் திரைப்பட விழாவில் ஒரு திரைப்பட ரசிகர் ஒருவர் ஸ்வீடனின் வடக்கு கடல் (North Sea) பகுதியில் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட தீவில் தனியாக 7 நாட்கள் செலவழிக்க வேண்டும். கோட்ட்போர்க்கின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் ரசிகர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர், தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டிருக்கும் கலங்கரை விளக்கத்தில் தங்க வைக்கப்படுவார். ஸ்வீடனின் மேற்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் பேட்டர் நோஸ்டர் (Pater Noster) பாறை தீவுக்கு அனுப்பப்படுவார்.
Also Read | திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!
தீவில் உள்ள ஹோட்டலாக மாற்றப்பட்ட கலங்கரை விளக்கத்தில் ஒரு சினிமா திரையிடும் அறையை அமைக்கும், அங்கு பார்வையாளர் 60 படங்கள் வரை பார்க்கலாம். அந்த திரைப்படங்கள் அனைத்தும் 2021 கெட்டபோர்க் திரைப்பட விழாவில் (Film-Festival) அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படும் படங்கள்.
"உங்களுக்கு தேவையான அனைத்தையும் அங்கு வைத்திருப்போம். நல்ல உணவு, சிறந்த பானம், ஒரு நல்ல படுக்கை என அனைத்தும் இருக்கும். இது உயிர்வாழ்வதைப் பற்றியது அல்ல. ஆனால் நீங்கள் உங்களுடன் எதையும் கொண்டு வர முடியாது: தொலைபேசி இல்லை, கணினி இல்லை, ஒரு புத்தகம் கூட இல்லை" என்று கோடெபோர்க் திரைப்பட திருவிழா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இது பற்றி பேசும் இயக்குனர் ஜோனாஸ் ஹோல்பெர்க். "நீங்கள் அலைகளைப் பார்க்கலாம், நீங்கள் திரைப்படங்களையும் பார்க்கலாம்." வெற்றி பெறும் விண்ணப்பதாரர் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவெண்டும். "அவர்கள் ஒரு திரைப்பட ஆர்வலராக இருக்க வேண்டும்; அங்கு அவர் இருக்கும்போது என்ன செய்கிறார், எப்படி உணர்கிறார் என்பதைப் பற்றிய வீடியோவை தினசரி பதிவு செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும்; அதுமட்டுமல்ல, அவர்கள் அங்கு செலவிடும் ஒரு வாரமும் உணர்ச்சி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சரியாக இருக்க வேண்டும். "
2021 கெட்ட்போர்க் திருவிழா ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை ஆன்லைனில் நடைபெறும். இது கெட்ட்போர்க்கில் உள்ள டிராக்கன் சினிமா மற்றும் நகரத்தின் 12,000 பார்வையாளர்கள் அமரும் ஐஸ் ஹாக்கி அரங்கமான ஸ்காண்டிநேவிய அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் ஒரு நபர் மட்டுமே அமர்ந்து திரைப்படம் பார்க்கக்கூடிய ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
Also Read | சூர்யா வா இது? இணையத்தில் வைரலாகும் மாஸ் ஓ மாஸ் புகைப்படம்!
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து, கெட்டபோர்க் திரைப்பட விழா சமூகத் தொலைவை கருப்பொருளாக வைத்து திரைப்பட விழாவை வித்தியாசமாக ஏற்பாடு செய்திருக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR