‘டோரா’ - இம்மாதம் 31-ம் தேதி வெளியீடு

Last Updated : Mar 16, 2017, 04:58 PM IST
‘டோரா’ - இம்மாதம் 31-ம் தேதி வெளியீடு title=

 ‘டோரா’ திரைப்படம் இம்மாதம் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

நேமிஜந்த ஜெயக் நிறுவனத்துடன் இணைந்து சற்குணம் சினிமா தயாரிக்க, புதுமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்க, நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் ‘டோரா’ . இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையும், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இப்படம் திகில் கலந்த பேய் படமாக உருவாகியுள்ளது. காருக்குள் இருக்கும் பேய்க்கும் அதை ஓட்டும் நயன் தாராவுக்கும் இடையில் நடக்கும் திக் திக் சம்பவங்கள்தான் கதை. இப்படம் இம்மாதம் 31-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Trending News