Godzilla II திரைப்படத்தின் வெளியீட்டு தேதி திடீர் மாற்றம்...

King Of The Monsters" திரைப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சர்வதேச வெளியிட்டுக்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : May 17, 2019, 04:14 PM IST
Godzilla II திரைப்படத்தின் வெளியீட்டு தேதி திடீர் மாற்றம்... title=

இந்தியாவில் வரும் மே 31-ஆம் நாள் "Godzilla II: King Of The Monsters" திரைப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சர்வதேச வெளியிட்டுக்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

"காட்ஜில்லா" மற்றும் "காங்: ஸ்கல் தீவு" திரைப்படத்தின் உலகலாவிய வெற்றியைத் தொடர்ந்து, இப்படங்களில் அடுத்த அத்தியாயம் "Godzilla II: King Of The Monsters" தற்போது வெளியாகவுள்ளது. எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்த படம் வரும் மே மாதம் 30-ஆம் தேதி ஆங்கில, ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகிறது. 

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான வார்னர் பிரதர்ஸின் "அகுமன்" திரைப்பட வெற்றியை அடுத்து, இந்திய பிராந்தியத்தில் அதன் சர்வதேச வெளியீட்டை வெளிக்கொணர்வதில் தயாரிப்பு நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது.

அந்த வகையில் தற்போது "திட்டமிடப்பட்ட சர்வதேச வெளியீட்டு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக "Godzilla II: King Of The Monsters" திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை சந்தித்த பிறகு தயாரிப்பாளர்கள் இந்த முடிவை சமீபத்தில் எடுத்துள்ளனர்.

பாபி பிரவுன், வேரா ஃபிராகிகா, சாலி ஹாக்கின்ஸ், கைல் சாண்ட்லர், ஓஷீ ஜாக்சன் ஜூனியர், கென் வத்தநபே மற்றும் பிராட்லி வைட்ஃபோர்டு ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. எனவே இத்திரைப்படம் வசூள் சாதனை படைக்கும் எவ்வித ஐயமும் இல்லை.

Trending News