கோல்டன் குளோப்ஸ் விருது : தங்கத்தாரகை “பிரியங்கா சோப்ரா”

Last Updated : Jan 9, 2017, 12:51 PM IST
கோல்டன் குளோப்ஸ் விருது : தங்கத்தாரகை “பிரியங்கா சோப்ரா” title=

ஆஸ்கர் விருதுக்கு நிகராக வழங்கப்படும் கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் வெற்றியாளர்களுக்கு விருது வழங்குவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கலந்துக் கொண்டார்.

கலிபோர்னியாவில் 74-வது கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியின் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தங்கத்தாரகை போல் மின்னினார்.

'குவாண்டிகோ' எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து உலக புகழ் பெற்ற பிரியங்கா சோப்ரா, தற்போது 'பேவாட்ச்' எனும் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகவிருக்கிறது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது மற்றும் எம்மி விருது நிகழ்ச்சிகளிலும் வெற்றியாளர்களுக்கு பிரியங்கா சோப்ரா விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News