டாப் ஹீரோக்கள் படங்களின் அப்டேட்களை அள்ளி தெறிக்கவிட்ட ஜி.வி பிரகாஷ்!

ரசிகர்கள் ட்விட்டரில் ஜி.வி.பிரகாஷின் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகள் குறித்து கேட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 6, 2022, 01:28 PM IST
  • மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி.
  • பாலா - சூர்யா படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.
  • விஜய்யும் - வெற்றிமாறனும் இணைந்து படம் பண்ண உள்ளனர்.
டாப் ஹீரோக்கள் படங்களின் அப்டேட்களை அள்ளி தெறிக்கவிட்ட ஜி.வி பிரகாஷ்! title=

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அதிக ரசிகர்கள் விரும்பப்படும் பட்டியலில் ஒருவராக மாறிவிட்டார்.  இவரின் இசையை கேட்டு ரசித்து கொண்டிருந்த அனைவரும் தற்போது இவரின் நடிப்பு திறமையை கண்டு ரசித்து வருகின்றனர்.  'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்குள் நுழைந்த இவர் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களும் ஒருவராகவும், சிறந்த நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது? சஸ்பென்ஸ் உடைத்த ஜீவி பிரகாஷ்!

பொதுவாக இணையத்தில் திரை பிரபலங்கள் அல்லது அரசியல் பிரபலங்கள் என அனைவரிடமும் மக்கள் கேள்வி கேட்பது வழக்கமான ஒரு நிகழ்வு.  அந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் சில கேள்விகளை கேட்டனர்.  அதில் ஒரு ரசிகர் ஜி.வியின் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகள் குறித்து கேட்டதற்கு அவர் அதற்கான அப்டேட்டுகளை அறிவித்துள்ளார்.  கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்திற்கு ஜி.வி இசையமைத்து இருக்கிறார்.  வரும் திங்கட்கிழமை இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது என்றும், இதன் பாடல் வரிகளை தனுஷ் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து மீண்டும் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.  'சூரரை போற்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.  அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இவர்கள் கூட்டணி அமையும் படத்தில் நீங்கள் பணிபுரிவீர்களா என்று ரசிகர் கேட்டதற்கு, ஜி.வி. பிரகாஷ் இருவரும் அவர்களது தற்போதைய பணியை முடித்துவிட்டு, இந்த புதிய படத்திற்கான பணியை தொடங்கினாள் நிச்சயம் நான் அதில் பணிபுரிவேன் என்று கூறியுள்ளார்.  மேலும் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் 3 பாடல்கள் இடம்பெரும் என்றும்,  பாலா கூட்டணியில் சூர்யா நடிக்கும் படத்தில் 5 பாடல்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

vaadivasal

மேலும் படிக்க | வலிமை படம் காப்பியா?! இணையத்தில் பரவும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News