ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ஹரீஷ் கல்யாணின் பார்க்கிங்

Harish Kalyan Parking For Oscar Academy: கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்ற பார்க்கிங் படத்திற்கு தற்போது ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 23, 2024, 03:37 PM IST
  • ஐந்து மொழிகளில் ரீமேகாகும் பார்க்கிங்.
  • பார்க்கிங் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம்.
ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ஹரீஷ் கல்யாணின் பார்க்கிங்  title=

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யான். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த படம் பார்க்கிங்.

பார்க்கிங் திரைப்படம்:
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் பார்க்கிங். நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தங்கள் வீட்டின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு மனிதர்களைச் சுற்றி நிகழும், ஒரு இறுக்கமான, மிக யதார்த்தமான கதையைச் சொல்கிறது. 

ஒரு அழுத்தமான கதையை பொழுதுபோக்கு வகையில் அழகாக சொல்லியுள்ள இந்தப் படம், பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் நிச்சயம் சந்தித்திருக்கும் இதே போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில், மிக அற்புதமான படைப்பாக அமைந்திருந்தது இந்தப் படம். பார்க்கிங் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்திருந்தார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருந்தார். 

மேலும் படிக்க | கோலிவுட்டில் மவுசு இல்லை.. பாலிவுட்டில் ஆரவார வரவேற்பு.. டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா

எளிமையான திரைக்கதையில் கதாபாத்திரங்கலின் உளவியலை மிக ஆழமாக வெளிப்படுத்திய பார்க்கிங் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் வசூலையும் அள்ளி குவித்தது. திரையரங்கத்தைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஹாட்ஸ்டாரில் வெளியானப் பின் இன்னும் பரவலான ரசிகர்களை சென்றடைந்தது இந்தப் படம்.

ஐந்து மொழிகளில் ரீமேகாகும் பார்க்கிங்:
தற்போது சூப்பர் ஹிட் படமான பார்க்கிங் திரைப்படம் மொத்தம் ஐந்து மொழிகளில் ரீமேக் உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியானது. இதில் நான்கு இந்திய மொழி ரீமேக் மற்றும் ஒரு அயல் மொழியிலும் இப்படம் ரீமேக் எடுக்க உள்ளார்கள்.

பார்க்கிங் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம்:
இந்நிலையில் தற்போது பார்க்கிங் படத்திற்கு தற்போது ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக நடிகர் ஹரிஷ் கல்யாண் X தளத்தில், 'பார்க்கிங்' படத்தின் திரைக்கதையை ஆஸ்கர் அகாடமி தனது நூலகத்தில் வைப்பதற்காக கேட்டுள்ளது நெகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். 

 

மேலும் படிக்க | அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசம் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News