சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் Second Look வெளியானது!

சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2021, 12:40 PM IST
சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் Second Look வெளியானது! title=

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இந்த வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

இதற்கிடையில் கொரோனா முதல் அலை காலகட்டத்தில் சிம்பு (Simbu)- கவுதம் மேனன் (Gautham Vasudev Menon) கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் இவர்களது கூட்டணியில் 'கார்த்திக் டயல் செய்த எண்'  என்ற குறும்படம் லாக்டவுனில் வெளியாகி, ஒரு பக்கம் கமெண்டுகளையும் மற்றோரு பக்கம் விமர்சனங்களையும் சந்தித்தது. அதன்பின் விண்ணைதாண்டி வருவாயா 2-ம் பாகத்திற்கான பேச்சுகள் இல்லாமல் போனது.

ALSO READ | சிம்புக்கு ரெட் கார்ட்; தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!

பிறகு வெந்து தணிந்தது காடு (Vendhu Thaninthathu Kaadu) படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிப்பட்ட நிலையில் இந்த படத்தின் 2-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சிம்புவின் 47வது படமாக உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் லம்பரசன மற்றும் நாயகி கயடு லோஹர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க கெளதம் மேனன் திட்டமிட்டுள்ளார். மேலும், படப்பிடிப்பில் யாரும் புகைப்படங்கள் எடுக்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளைப் படக்குழு எடுத்துள்ளது.

 

 

இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார். சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ALSO READ | Simbu movie update: சிம்புவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி; மாஸ் ஃபர்ஸ்ட் லுக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News