96 ரீமேக்: வெளியானது சமந்தாவின் "ஜானு" படத்தின் டீஸர்

தெலுங்கில் ரீமேக்காகி வரும் ‘96’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.  

Last Updated : Jan 10, 2020, 12:37 PM IST
96 ரீமேக்: வெளியானது சமந்தாவின் "ஜானு" படத்தின் டீஸர்

தெலுங்கில் ரீமேக்காகி வரும் ‘96’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.  

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படம் ‘96’ . பள்ளிப்பருவ காதல், நட்பை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ராமசந்திரன்(ராம்), த்ரிஷா நடித்திருந்த ஜானகி தேவி(ஜானு) என்ற கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதில், கோல்டன் ஸ்டார் கணேஷ் மற்றும் பாவனா நடித்திருந்தார். அந்தவகையில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும், ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும் இணைந்து நடித்துள்ளனர். ‘ஜானு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தையும் தமிழில் இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி போஸ்டர் வெளியாகி  வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.  

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

More Stories

Trending News