AR Rahman And His Wife Saira Separated: ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா தனது கணவரை பிரிய இருப்பதாக அறிவித்துள்ளார். இது இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருமணமாகி பல வருடங்கள் கழித்து, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் உணர்ச்சி மிகுந்த கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகள் இருவரும் தங்கள் வாழ்வில் பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
#BREAKING : #ARRahman and his wife are separating after 29 years of marriage.. pic.twitter.com/QbTLzbhaMT
— Ramesh Bala (@rameshlaus) November 19, 2024
இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் அவர்களை இணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா தெரிவித்துள்ளார். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சாய்ரா எதிர்பார்க்கிறார். ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்திற்குள் செல்ல இருக்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.