என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன்: நடிகர் ரஜினி!!

சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மகேந்திரன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த  நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இத்தகவலை அவரது மகன் ஜான் மகேந்திரன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

Last Updated : Apr 2, 2019, 12:55 PM IST
என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன்: நடிகர் ரஜினி!! title=

சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மகேந்திரன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த  நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இத்தகவலை அவரது மகன் ஜான் மகேந்திரன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

நடிகராகவும், அவதாரம் எடுத்த மகேந்திரன், விஜய் நடித்த ’தெறி’, ரஜினியின் ’பேட்ட’, நிமிர், பூமராங் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் யதார்த்த சினிமாவுக்கு சொந்தக்காரரான இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு ஏராளமான திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மகேந்திரன் இல்லத்தில், அவரது உடல் திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலக திரையுலகினர் அனைவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு சினிமாவை தாண்டிய நட்பு உள்ளது. எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். புதுமையான நடிப்பின் பரிமாணத்தை எனக்கு கற்றுக்கொடுத்தவர் அவர் தான். தமிழ் திரையுலகிற்கு என்னை அறிமுக படுத்தியவரும் அவர் தான். வாழ்க்கையிலும் சரி திரையுலகிலும் சரி எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், இவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு. தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும் என்றார். 

Trending News