வேண்டுகோள் விடுத்த ரஹ்மான்! ஏற்றுக்கொண்ட இளையராஜா!

துபாயில் உள்ள ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு இளையராஜாவை ரஹ்மான் அழைத்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 7, 2022, 03:59 PM IST
  • துபாயில் இளையராஜா இசை கச்சேரி.
  • ரகுமான் ஸ்டுடியோவில் இளையராஜா.
  • ரகுமானின் கோரிக்கை ஏற்ற இளையராஜா.
வேண்டுகோள் விடுத்த ரஹ்மான்! ஏற்றுக்கொண்ட இளையராஜா! title=

நேற்று மாலை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இசைஞானி இளையராஜா துபாயில் உள்ள தனது ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு வருகை தந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் "எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு மேஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி.  எதிர்காலத்தில் எங்கள் ஃபிர்தௌஸ்  ஸ்டுடியோவில் அவர் ஒன்றை இசையமைப்பார் என்று நம்புகிறேன்!" என்று பதிவிட்டு இருந்தார்.

 

மேலும் படிக்க | சமுத்திரக்கனி படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண்!

இந்த புகைப்படம் நேற்றிலிருந்து இணையத்தில் தீயாய் பரவியது.  இருவரது புகைப்படங்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் காணப்பட்டது.  மார்ச் 5-ம் தேதி , உலகின் மிகப்பெரிய கலாச்சாரக் கூட்டமான எக்ஸ்போ 2020 துபாயில் இளையராஜா பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.  இசை நிகழ்ச்சி முடிந்ததும், இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மானை துபாயில் உள்ள அவரது ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவில் சந்தித்தார். 

 

இந்நிலையில் இன்று, இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ரகுமானின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  “கோரிக்கை ஏற்கப்பட்டது.. விரைவில் இசையமைக்கத் தொடங்குவோம்” ரகுமானின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார் இளையராஜா. தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்த இருவரின் நட்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

இளையராஜா ரஹ்மானின் தந்தை சேகருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.  அதேபோல் இளையராஜாவுக்கு ரஹ்மான் பல படங்களில் கீபோர்டிஸ்ட்டாக பணியாற்றினார். இருவரும் கடுமையான போட்டியாளர்களாக முன்னிறுத்தப்பட்டனர், ஆனால் அவர்களே நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதை பலமுறை முன்னிருந்த கின்றனர்.  

மேலும் படிக்க | விக்ரமுடன் மோதும் விக்ரம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News