கமல் இல்லாமல் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு

நடிகர் கமல்ஹாசன் இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் சங்கர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 18, 2022, 06:37 PM IST
  • இந்தியன் 2 ஷூட்டிங் விரைவில் தொடக்கம்
  • கமல்ஹாசன் இல்லாமல் தொடங்கும் ஷூட்டிங்
  • அமெரிக்காவில் இருக்கிறார் கமல்ஹாசன்
கமல் இல்லாமல் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு  title=

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவானது இந்தியன் 2 படம். லைகா புரொடக்ஷன் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்த இந்தப் படம், விறுவிறுப்பாக நடைபெற்ற ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக முடங்கியது. தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மூவர் படப்பிடிப்பு தள விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்பின்னர், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன், கமல்ஹாசன் இடையே விரிசல் உண்டாது. இயக்குநர் சங்கர் கேட்ட பட்ஜெட்டை கொடுக்க மறுத்த லைகா, தாங்கள் கூறும் பட்ஜெட்டிற்குள் படத்தை முடிக்குமாறு வற்புறுத்தியது.

மேலும் படிக்க | சீதா ராமம் படத்தை அனைவரும் பாருங்கள் - வெங்கையா நாயுடு புகழாரம்

இதனை ஏற்க மறுத்த இயக்குநர் சங்கர், படத்தை இயக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காமல் நீதிமன்றம் வரை பிரச்சனை சென்றது. இருப்பினும், சங்கர் தெலுங்கில் ராம்சரண் லீட் ரோலில் நடிக்கும் ஆர்சி 15 என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பில் விக்ரம் படத்தில் பிஸியானார். ஆர்சி 15 படத்தின் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்ட நிலையில், விக்ரம் படம் வெளியாகி வசூலில் ராஜபாட்டை நடத்தியது. இந்தப் படத்தின் வெற்றி மீண்டும் இந்தியன் 2 படத்திற்கான தொடக்க புள்ளியை அமைத்து கொடுத்தது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், தயாரிப்பு பணியில் இணைய விருப்பம் தெரிவித்ததால், லைகா நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டது.

உடனடியாக படப்பிடிப்பு பணிகளை கவனிக்க தொடங்கினார் இயக்குநர் சங்கர். விகரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் கமல், அடுதடுத்து புதிய படங்களின் தயாரிப்பு பணிகளை தொடங்கி வைத்துவிட்டு அமெரிக்கா பறந்துவிட்டார். அங்கு இந்தியன் 2 படத்திற்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கும் அவர், விரைவில் இந்தியா திரும்ப இருக்கிறார். ஆனால், அவரின் வருகைக்கு முன்னதாகவே இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் சங்கர். ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. இதில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் காட்சிகள் விரைவாக படமாக்க இந்தியன் 2 படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். 

மேலும் படிக்க | பா.இரஞ்சித்தின் புதிய படம் - நாளை வெளியாகிறது ட்ரெய்லர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News