Jagame Thandhiram: தனுஷின் ஜகமே தந்திரம் படைத்த அசத்தல் சாதனை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2021, 11:53 AM IST
Jagame Thandhiram: தனுஷின் ஜகமே தந்திரம் படைத்த அசத்தல் சாதனை title=

Jagame Thandhiram: தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படம் உலகம் முழுக்க 17 மொழிகளில் கடந்த 18 ஆம் தேதி வெளியானது. 

தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் வெளியானது.

ALSO READ | Dhanush New Movie: தனுஷ் பட புதிய அப்டேட்; இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர். ஜோஜு ஜார்ஜ் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து அதில் ஈழத்தமிழர்கள், அரசியல், காதல் என படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் இப்படம் உலக அளவில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற படம் என நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சாதனையை தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

ALSO READ | தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம்; HD தரத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News