இது டைகரின் கட்டளை.. ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் அப்டேட் இதோ

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2023, 07:33 PM IST
  • காவாலா பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
  • இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
  • வெளியானது ஜெயிலர் படத்தின் 2வது பாடல் அறிவிப்பு.
இது டைகரின் கட்டளை.. ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் அப்டேட் இதோ title=

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் அப்டேட்அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம்  'ஜெயிலர்' இந்த  திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தில் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

ஜெயிலர் படத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகை தமன்னாவும் ஜோடியாக நடிக்கிறார். இது, அவருக்கு நடிகர் ரஜினியுடனான முதல் படமாகும். மேலும் பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஜெயிலர் படத்தில் நடக்க உள்ளதால் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளது. 

மேலும் படிக்க | கோபிநாத் vs கரு பழனியப்பன் vs ஆவுடையப்பன்.. ஆவலை அதிகப்படுத்தும் விவாத நிகழ்ச்சிகள்.!!

அந்த வகையில் கடந்த 6 ஆம் தேதி அன்று, இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘காவாலா’ பாடல் வெளியானது. இதில் தமன்னா இதுவரை இல்லாத அளவிற்கு ஆட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதுவரை  தமிழ் படங்களில் தனது இடுப்பை தவிர வேறு எந்த பாகத்தையும் காட்டாமல் நடித்து வந்த அவர், ‘காவாலா’ பாடலில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே கவர்ச்சி காண்பித்திருக்கிறார். இந்த பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறார். குறிப்பாக இறுதி காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றியது ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் பற்றிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது 'ஜெயிலர்' படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  அந்தவகியில் ‘ஹூக்கும்’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வருகிற ஜூலை 17 ஆம் தேதி வெளியாகயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, தமன்னா நடனத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் காவாலா பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஜெயிலர் படத்தின் பணிகளை முடித்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக  ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இதற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். முன்னதாக இதற்கான போட்டோஷூட் ரகசியமாக சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளியானது , மேலும் இது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | போர் தொழில் பிரமாண்ட வெற்றி! சரத்குமார் நடித்துள்ள வேறு சில போலீஸ் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News