கோலிவுட்டுல் ஜான்வி கபூர்...? போனி கபூர் போட்ட திடீர் ட்வீட்!

Janhvi Kapoor In Kollywood: லிங்குசாமி இயக்கத்தில் 'பையா 2' திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரது தந்தை போனி கபூர் திடீரென ட்வீட் செய்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2023, 12:08 PM IST
  • ஜான்வி கபூர் இதுவரை தமிழில் நடித்ததில்லை.
  • கோலமாவு கோகிலா ரீமேக்கில் நடித்திருந்தார்.
  • விரைவில் இவர் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டுல் ஜான்வி கபூர்...? போனி கபூர் போட்ட திடீர் ட்வீட்!

Janhvi Kapoor In Kollywood: மறைந்த நடிகை ஸ்ரீதேவி - பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 25 வயதான ஜான்வி கபூர், 2018ஆம் ஆண்டில் தாடக் என்ற படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்த படம், 2016இல் மராத்தியில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை பெற்ற சாய்ராட் படத்தின் இந்தி மறு ஆக்கம் ஆகும். 

ஸ்ரீதேவியின் மகள் பாலிவுட்டில் அறிமாகிறார் என அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால், விமர்சன ரீதியாக சற்று பின்தங்கினாலும், இந்த  படம் சுமாரான வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியான 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' ஆந்தாலஜி படத்திலும் அவர் நடிப்பு பாரட்டப்பட்டது. தொடர்ந்து, கோவிட் காலத்தில் வெளியான 'குன்ஜன் சக்ஸேனா: கார்கில் பெண்', கோவிட் இரண்டாம் அலையில் ரூஹி ஆகிய படங்களும் வெளியான. 

மேலும் படிக்க | Netflix-ல் இந்த நாளில் ரிலீசாகும் துணிவு: வெளியான மாஸ் தகவல்

தொடர்ந்து, கடந்தாண்டு தமிழின் கோலமாவு கோகிலா ரிமேக்கான குட் லக் ஜெரி படமும், மலையாளத்தின் ஹெலன் படம் ரிமேக்கான மிலி படமும் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இதுவரை இவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும், ஜான்வி கபூர் அவரின் ஸ்டைலிஷான புகைப்படங்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வந்தார்.

ஜான்வி கபூர் தமிழ் படங்கள் குறித்து பலமுறை பேசியுள்ள நிலையில், தனக்கு விஜய் சேதுபதிதான் மிகவும் பிடித்த தமிழ் நடிகர் எனவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, ஜான்வியும் தனது தாயார் ஸ்ரீதேவி போன்று, ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து அவ்வப்போது செய்திகள் வெளியானாலும், சமீபத்தில் ஜான்வி தமிழில் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது. 

அதாவது, லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான பையா படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. பையா 2 திரைப்படத்தில் ஆர்யா - ஜான்வி ஆகியோ நாயகன் - நாயகியாக நடிக்க உள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவியது. எனவே, ஜான்வி விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், ஜான்வியின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,"ஜான்வி கபூர் தற்போது எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாவது தள்ளிப்போவது உறுதியாகியுள்ளது.  

மேலும் படிக்க | HBD STR: பிறந்தநாள் பரிசாக வந்த சிம்புவின் ‘பத்து தல’ பாடல், தெறிக்கும் இசை, ஜொலிக்கும் சிம்பு !!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News