அஜித்துடன் மோதுகிறார் சார்பட்டா பரம்பரை வேம்புலி?

ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஜான் கோக்கன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 10, 2022, 02:42 PM IST
  • ஏகே 61ல் நடிக்கும் ஜான் கோக்கன்
  • வேம்புலி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் கோக்கன்
  • அஜித்துக்கு வில்லனாகிறார் வேம்புலி
அஜித்துடன் மோதுகிறார் சார்பட்டா பரம்பரை வேம்புலி? title=

வலிமை பெற்ற கலவையான விமர்சனங்களை அடுத்து அஜித் - ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஏகே 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

தபு உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் க்ரைம் கான்செப்ட்டில் எடுக்கப்படவிருப்பதால் வலிமையில் விட்டதை வினோத் இப்படத்தில் மீட்டெடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

Valimai

இதற்கிடையே படத்தின் பூஜை ஹைதராபாத்தில் போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது. மேலும், மௌண்ட் ரோடு செட்டும் அங்கு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ’பத்தல.. பத்தல’ விக்ரமில் கமல் கொடுக்கப்போகும் ஷாக் - மாஸ் அப்டேட்

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற ஜான் கோக்கன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

John

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது கனவு நனவாகி இருக்கிறது. எனது சிரிப்புக்கான காரணத்தை உங்களால் யூகிக்க முடிகிறதா?” என பதிவிட்டுள்ளார். இப்படத்தில் வில்லனாக ஜான் நடிக்கவிருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான சூழலில் இந்த ட்வீட்டின் மூலம் அவர் அதை உறுதிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 

 

அதுமட்டுமின்றி அவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் ஏகே 61ல் நடிக்கவிருப்பதையே அவர் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் எனவும் பலர் கமெண்ட் செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க | குட் நியூஸ் சொன்ன நமீதா; நிறைமாத கர்ப்பத்துடன் போஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News