’பத்தல.. பத்தல’ விக்ரமில் கமல் கொடுக்கப்போகும் ஷாக் - மாஸ் அப்டேட்

விக்ரம் படத்தில் கமல் ‘பத்தல.. பத்தல’ என்ற பாடலை எழுதி பாடியிருக்கிறாராம்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 10, 2022, 12:58 PM IST
  • விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
  • மே 15 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது
  • கமல் எழுதி பாடியிருக்கும் ஒரு பாடல் விரைவில்
’பத்தல.. பத்தல’ விக்ரமில் கமல் கொடுக்கப்போகும் ஷாக் - மாஸ் அப்டேட் title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கமல்ஹாசன், பகத்பாசில் மற்றும் விஜய் சேதுபதி என நடிப்பு அசுரர்கள் நடித்திருக்கும் இந்தப் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே வெளியான விக்ரம் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தை தமிழகத்தில் ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

மேலும் படிக்க | குட் நியூஸ் சொன்ன நமீதா; நிறைமாத கர்ப்பத்துடன் போஸ்

மே 15 ஆம் தேதி விக்ரம் படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. அனிரூத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்போது லேட்டஸ்டாக ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் நடிகர் கமல் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். ‘பத்தல ..பத்தல’ என தொடங்கும் அந்தப் பாடலை எழுதியதும் கமல்ஹாசனாம்.

அனிரூத் இசையில் அந்தப் பாடல் வெகுசிறப்பாக வந்திருப்பதாகவும், ரசிகர்களை சுண்டியிழுக்கும் என டிராக்கர்ஸ் சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர். இதேபோல், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நிறைவடைந்த விக்ரம் படத்தை கமல் முழுவதும் பார்த்துவிட்டாராம். இயக்குநர் லோகோஷ் கனகராஜ் அண்மையில் கமலுக்கு படத்தை போட்டுக் காண்பித்துள்ளார். படத்தை பார்த்த கமல்ஹாசன், தான் எதிர்பார்த்தைவிட படம் சிறப்பாக வந்திருப்பதாக லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்தாராம். கமலுக்கு மிக நெருக்கமானவர்களும் ‘விக்ரம்’ படத்தை பார்த்துள்ளனர். 

மேலும் படிக்க | ’டான்’ பட்டத்தை திருப்பிக் கொடுத்த சிவா - வாங்க மறுத்த உதயநிதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News