பிறப்புறுப்பில் பாட்டில்... நடுவிரலை வெட்டி..! ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ நாயகன் மீது பகீர் குற்றச்சாட்டு!

தனது முன்னாள் மனைவி, தனது நடுவிரலை வெட்டியதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு ஹாலிவுட்டில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே ஜானி டெப் ஒரு சில படங்களில் இருந்து இந்த வழக்கால் நீக்கப்பட்டார். 

Written by - ZEE Bureau | Last Updated : Apr 16, 2022, 12:10 PM IST
  • ஜானி டெப் மீது முன்னாள் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு
  • பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்
  • ஜானி டெப் - அம்பெர் வழக்கில் அதிரடி திருப்பம்
பிறப்புறுப்பில் பாட்டில்... நடுவிரலை வெட்டி..! ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ நாயகன் மீது பகீர் குற்றச்சாட்டு!

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ஜானி டெப். ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பார்.  இவர் தனது 2-வது மனைவியிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 350 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

மேலும் படிக்க | ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்: தீபிகா படுகோன் செய்த கமெண்ட்!

58 வயதாகும் ஜானி டெப் கடந்த 1983-ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு 2015-ம் ஆண்டு பிரபல நடிகை அம்பெர் ஹெர்டை திருமணம் செய்து கொண்டார். அம்பெர் அக்வாமேன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் திருமண வாழ்க்கையும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2017-ம் ஆண்டு அம்பெர்ட்- ஜானி டெப் விவாகரத்து பெற்றனர்.

Johnny Depp Amber heard

அதன் தொடர்ச்சியாக கடந்த 2018-ம் ஆண்டு தனது முன்னாள் மனைவி அம்பெர் ஹர்ட் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது விரல் ஒன்றை வெட்டியதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறி அவரிடம் இருந்து 350 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார் டெப். 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஜானி டெப் - அம்பெர்ட் இருவரும் ஒருவர் மீது ஒருவர் படு மோசமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | KGF 3 திரைப்பட படபிடிப்பு தொடங்கிவிட்டதா? எகிறும் எதிர்பார்ப்பு

அந்த வகையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற போது, அம்பெர்ட் ஒரு பகிரங்க தகவலை தெரிவித்தார். அவர், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடிக்க ஜான் டெப் ஆஸ்திரேலியா சென்ற போது அவருடன் சென்றதாகவும், அப்போது ஜான் தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து கொடுமை படுத்தியதாகவும் நீதிபதிகள் முன் தெரிவித்தார். அதோடு அப்போது பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதோடு சிறுநீரால் தனது பெயரை ஜானி டெப் எழுதியதாகவும் ஒரு மோசமான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

Johnny Depp

போதைப்பழக்கத்துக்கு அடிமையான ஜான் டெப் போதையில் தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் தான் விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் அம்பெர்ட் தெரிவித்துள்ளார். 

இவர் இப்படி என்றால் ஜான் டெப்பும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். தனது முன்னாள் மனைவி, தனது நடுவிரலை வெட்டியதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு ஹாலிவுட்டில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே ஜானி டெப் ஒரு சில படங்களில் இருந்து இந்த வழக்கால் நீக்கப்பட்டார். 

Johnny Depp Amber heard

தற்போது இந்த வழக்கில் ஜான் டெப்பின் மருத்துவரும் சில அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு விவாகரத்து சமயத்தில் இந்த ஜோடி ஆலோசனை பெற மருத்துவ நிபுணரை சந்தித்த போது, இருவருக்குள்ளும் கொடூர எண்ணங்கள் இருந்ததாக கூறியுள்ளார். அதோடு இவர்கள் ஒருவரை ஒருவர் மோசமாக வன்கொடுமை செய்து ரசித்துக் கொண்டதாகவும், அதே சமயம் உண்மையாக இருவரும் காதலித்ததாகவும் நீதிபதியிடம் அறிக்கை அளித்துள்ளார். இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் மனைவியை கொடுமைப் படுத்திய ஜான் டெப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

More Stories

Trending News